மேலும் அறிய
Ethirneechal : வெண்பாவை ஈஸ்வரியிடம் ஒப்படைத்த ஃபர்ஹானா... மோப்பம் பிடித்த ஜான்சி ராணி.. எதிர்நீச்சலில் நேற்று
Ethirneechal Nov 1 : ஃபர்ஹானா வெண்பாவை ஈஸ்வரியிடன் கொண்டு வந்து விட்டதை மறைந்திருந்து பார்த்து விட்ட ஜான்சி ராணி அவள் பின்னாடியே போய் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள்.

எதிர்நீச்சல் நவம்பர் 1 எபிசோட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய ( நவம்பர் 1) எபிசோடில் அப்பத்தா வந்து ஈஸ்வரியிடம் "ஜீவானந்தத்தை பங்ஷனுக்கு வர சொல்லி இன்வைட் பண்ணி இருந்தேன். அது விஷயமா அவர் கிட்ட பேசலாம்னு பார்த்தா போன் போகல. நிச்சயமா வரேன்னு சொன்னாரு. இப்போ போன் ஆஃப்னு வருது. உனக்கு ஏதாவது தெரியுமா?" என அப்பத்தா கேட்கிறார். ஈஸ்வரி "எனக்கு தெரியாது" என சொல்லிவிடுகிறாள்.

ஈஸ்வரிக்கு ஃபர்ஹானா போன் செய்து "நான் உங்க வீட்டு வாசல் வெளியே தான் இருக்கேன். கொஞ்சம் வெளிய வர முடியுமா?" என கேட்க ஈஸ்வரி நந்தினி, ஜனனி மற்றும் ரேணுகாவை அழைத்து கொண்டு பதற்றத்துடன் வெளியில் செல்கிறாள். அங்கே ஒரு கார் அருகே ஃபர்ஹானா நின்று கொண்டு இருக்கிறாள்.
"தோழர் ஒரு முக்கியமான பொறுப்பை எங்களிடம் கொடுத்து விட்டு ஊருக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றார்" என ஃபர்ஹானா சொல்ல ஈஸ்வரி "கொஞ்சம் புரியும் படி சொல்லுமா. நாங்களே பதட்டத்துடன் வந்து இருக்கோம்" என சொல்ல காரில் உள்ளே பார்க்க சொல்கிறாள் ஃபர்ஹானா. உள்ளே வெண்பா தலையில் அடிபட்ட படி தூங்கி கொண்டு இருக்கிறாள். அதை பார்த்த ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.
"தோழர் வெண்பாவை என்னை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டுட்டு போனார். என்னால் முடிஞ்ச அளவு நான் பாத்துக்கிட்டேன். ஆனா வெண்பா அம்மா அம்மா என அழுது கொண்டே இருந்தாள். தூங்கும்போது பெட்டில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டது. காய்ச்சல் வேற அடிக்குது. மருந்தும் சாப்பிட மாட்டேன் என்கிறாள். எனக்கு வேற வழி தெரியல. அதனால தான் நான் தோழர் பேச்சையும் மீறி இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். உங்களால வெண்பாவை பாத்துக்க முடியுமா " என ஃபர்ஹானா கேட்க ஈஸ்வரியும் "நான் பார்த்து கொள்கிறேன்" என சொல்லி வெண்பாவை அழைத்து செல்கிறாள். இவர்கள் பேசி கொண்டு இருந்ததை ஜான்சி ராணி மறைந்திருந்து வேவு பார்க்கிறாள்.

கதிர் அடி பட்டு வந்தது பற்றியும் கெளதம் பற்றியும் குணசேகரன் விசாரித்து கொண்டு இருக்கிறார். "இப்படி அடி வாங்கிட்டு வந்து நிக்கிற... உனக்கு அசிங்கமா இல்லையா" என கதிரை திட்டுகிறார் குணசேகரன். அங்கிருந்த ஆட்களை பற்றியும் அவர்கள் பிளான் பற்றியும் பேசும் போது இது அனைத்தும் அப்பத்தாவின் பிளானாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்கள். அப்போது கரிகாலன் கதிர் எப்படி கௌதமிடம் போய் சிக்கினான் என்பதை பற்றி சொல்லவும் குணசேகரன் டென்ஷனாகிறார்.
ஞானத்தையும் கரிகாலனையும் கழட்டி விட்டு கதிரை அழைத்து கொண்டு வளவனை பார்க்க செல்கிறார் குணசேகரன். அனைவரும் வெண்பாவுடன் உட்கார்ந்து அவளை அசுவாசப்படுத்துகிறார்கள். அப்போது அவர்களை தேடி கொண்டு ஜான்சி ராணி வருகிறாள். அவள் குரல் கேட்டதும் ஐஸ்வர்யாவை படுக்க வைத்து வெண்பாவை மறைத்து வைக்கிறார்கள். உள்ளே வந்த ஜான்சி ராணி நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறாள். "ஏண்டி ஈஸ்வரி ஏதோ பிள்ளையை தூக்கிட்டு குடுகுடுவென ஓடி வந்தியே யார் அந்த பிள்ளை? " என கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
கோவை
ஆட்டோ
Advertisement
Advertisement