மேலும் அறிய

Ethirneechal : வீட்டுக்கு வந்த தர்ஷினி: ஜனனியை அசிங்கப்படுத்திய விசாலாட்சி அம்மா: எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!

Ethirneechal: தர்ஷியிடம் ஈஸ்வரி நெருங்கக் கூடாது என நீதிபதியிடம் கேட்டுக்கொள்கிறார் குணசேகரன். தர்ஷினியின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் ஜனனி. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச்.15) எபிசோடில் குணசேகரன் தர்ஷினியை பார்க்க வேண்டும் என டாக்டரிடம் கேட்கிறார். அவளுக்கு ட்ரீட்மென்ட் நடைபெறுவதால் சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம் என சொல்கிறார் டாக்டர். ஞானம் மற்றும் கதிர் அங்கு வருத்தத்துடன் நிற்க அவர்களை வீணாக வம்பு இழுக்கிறான் கரிகாலன். அவர்களை அவமானப்படுத்தி பேசி வீட்டுக்கு போகச் சொல்லி சண்டை போடுகிறான். அப்படியே அவர்களுக்கு கைகலப்பு பெரிதாகிறது. போலீஸ் அவர்களை தடுக்கிறார்கள்.

ஈஸ்வரியை சென்று ஜனனி,சக்தி, நந்தினி மற்றும் ரேணுகா சந்திக்கிறார்கள். தர்ஷினி கிடைத்ததை பற்றியும் அவள் மருத்துவமனையில் இருப்பதை பற்றியும் சொல்கிறார்கள். ஜீவானந்தம் பற்றி  ஈஸ்வரி விசாரிக்க அதற்கு அவரை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என ஜனனி சொல்கிறாள். ஈஸ்வரிக்கு போலீஸ் மீது சந்தேகம் வருகிறது. தர்ஷினியை காப்பாற்றுவதற்காக தான் ஜீவானந்தம் இவ்வளவு ரிஸ்க் எடுத்து போலீசிடம் இருந்து தப்பித்தார். அவரை ஏதாவது செய்து விட்டு போலீஸ் இப்படி தப்பித்துவிட்டார் என பொய் சொல்கிறதா எனக் குழப்பத்தில் கேட்கிறாள். சக்தியிடம் சொல்லி அவரைப் பற்றி விசாரிக்க சொல்கிறாள்.

Ethirneechal : வீட்டுக்கு வந்த தர்ஷினி: ஜனனியை அசிங்கப்படுத்திய விசாலாட்சி அம்மா: எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!

நீதிபதியிடம் ஆஜர் செய்யப்பட்ட ஈஸ்வரி, ஜீவானந்தத்திற்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். அதைக்கேட்டு கோபமான நீதிபதி, ஈஸ்வரி மேல் சந்தேகமாக இருக்கிறது என்கிறார். மேலும் ஈஸ்வரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறார். தர்ஷியிடம் சென்று வாக்குமூலம் வாங்கப் போவதாகவும், அப்படி தர்ஷினி ஈஸ்வரிக்கு எதிராக ஏதாவது சொன்னால் நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் கூறுகிறார் நீதிபதி.

ஹாஸ்பிடலுக்கு சென்ற நீதிபதி தர்ஷினியிடம் இருந்து வாக்குமூலம் வாங்குகிறார். சுய நினைவிலே இல்லாத தர்ஷினி ஜீவானந்தத்தை நினைத்து "அப்பா என்னை காப்பாத்துங்க" என அலறுகிறாள். அதை அனைவரும் அவள் குணசேகரனை தான் சொல்கிறாள் என நினைத்து கொள்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தர்ஷினி புலம்புவதைப் பார்த்து கவலைப்படுகிறார் குணசேகரன். நீதிபதியிடம் "என்னுடைய பொண்ணை இந்த அளவுக்கு கொடுமைப்படுத்திய அவ தாய் இனி அவ கிட்ட கூட நெருங்க கூடாது" என்கிறார்.

Ethirneechal : வீட்டுக்கு வந்த தர்ஷினி: ஜனனியை அசிங்கப்படுத்திய விசாலாட்சி அம்மா: எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!

"எங்க அண்ணியை பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். இவர் சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல" என்கிறான் கதிர். அவனை பார்த்து குணசேகரன் முறைக்கிறார்.

ஜனனி வேகவேகமாக ஹாஸ்பிடலுக்கு விரைகிறாள். "அண்ணிக்கு ஜாமீன் கிடைச்சுடுச்சா?" என ஜனனியிடம் கேட்கிறான் கதிர். கிடைச்சுடுச்சு என ஜனனி சொன்னதைக் கேட்டு ஆவேசப்படுகிறார் குணசேகரன்.

குணசேகரன் தர்ஷினியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவர் பொம்மையைப் போல இருப்பதை பார்த்த ஜனனி "அவளை உடனே டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும்" என பதட்டப்படுகிறாள். அவளை தொடப்போன ஜனனியை விசாலாட்சி அம்மா தடுத்து நிறுத்தி, தர்ஷினி மேல் கை வைக்க கூடாது என தட்டிவிடுகிறார். பேத்தியின் இந்த நிலைக்கு நீ தான் காரணம் என அவளைத் திட்டுகிறார் விசாலாட்சி அம்மா. குணசேகரன் முறைத்துக் கொண்டே உட்கார்ந்து இருக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget