மேலும் அறிய
Advertisement
Ethirneechal: வாக்கு கொடுத்த குணசேகரன்.. பதறிய தர்ஷினி.. ஈஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன? எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal : கரிகாலனுக்கு தர்ஷினியை திருமணம் செய்து வைப்பதாக குணசேகரன் வாக்கு கொடுக்க, வீட்டில் பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் எஸ்.கே.ஆர் வீட்டுக்கு குணசேகரன் மிரட்ட வந்த சமயத்தில் ஆதிரையும் அங்கு வந்து அருண் விபத்துக்கும், அப்பத்தாவின் சாவுக்கும் காரணம் குணசேகரன் தான் என்ற உண்மையை சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அந்த நேரத்தில் சாருபாலா மிகவும் உறுதியாக “நான் ஆதிரைக்கும் அருணுக்கும் நிச்சயமாக திருமணம் செய்து வைப்பேன்” என சவால் விட, ஞானம் ஆதிரையை தரதரவென இழுத்து கொண்டு வெளியில் செல்ல அந்த நேரம் பார்த்து போலீஸ் வந்து ஞானத்தை தடுக்கிறார். ஆனாலும் இது எங்க வீட்டுக்கு பொண்ணு என்ன செய்யணும் என எங்களுக்கு தெரியும் என வீரப்பாக பேச, அந்த நேரத்தில் நீதிபதி அங்கு வந்து ஆதிரை மூலம் நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்கிறார்.
ஆதிரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தது பற்றி சொல்ல, நீதிபதி ஆதிரையை நீதிமன்றத்தில் நியாயம் கேட்கச் சொல்கிறார். வலுக்கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் உங்கள் அனைவருக்கும் தண்டனை உண்டு என குணசேகரனிடம் சொல்ல, அவர் அதிர்ச்சி அடைகிறார். பிறகு அனைவரும் ஆதிரையை ஒழித்து விட்டு வீட்டுக்கு வருகிறார்கள்.
விசாலாட்சி அம்மா ஆதிரை வீட்டை விட்டுச் சென்றதற்கு மருமகள்கள் தான் காரணம் என ஏத்திவிடுகிறாள் ஜான்சி. அந்த நேரத்தில் குணசேகரன் வந்து நடந்ததை பற்றிச்சொல்கிறார். அவளை ஏன் தண்டிக்கவில்லை என விசாலாட்சி அம்மா, கேட்க அருணைக் கொல்ல ஆள் அனுப்பியது, அப்பத்தாவை கொன்றது, ஜீவானந்தம் மனைவியை கொன்றது அனைத்தும் உங்களுடைய மகன் அவருக்கு ஏன் நீங்கள் தண்டனை கொடுக்கவில்லை என ஜனனி கேட்டதும் ஆவேசப்படுகிறார் விசாலாட்சி அம்மா.
ஜான்ஸியும் கரிகாலனும் மண்ணெண்ணையுடன் வந்து குணசேகரனிடன் நியாயம் கேட்க வீம்புக்காக “நான் என்னுடைய மகளை உனக்கு கட்டி கொடுக்கிறேன்” என கரிகாலனுக்கு வாக்கு கொடுக்கிறார் குணசேகரன். அதைக் கேட்ட ஈஸ்வரியும் தர்ஷினியும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தர்ஷினியை கரிகாலனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறேன் என குணசேகரன் சொன்னதால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி "நீங்க வீம்புக்கு இதெல்லாம் செஞ்சுகிட்டு இருக்கீங்க" என சொல்ல "ஆமாடி வீம்புக்கு தான் பண்ணறேண்" என குணசேகரன் சொல்ல அவர் பேசுவதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
தர்ஷினி இது குறித்து பேசுகையில் "அவர் அதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது மா" என சமாதானம் செய்கிறாள் ஜனனி. "செய்யமுடியாது என நாம தானே சித்தி தனியா பேசிகிட்டு இருக்கோம். ஆனா அவருதான் ஜெயிக்கிறார்" என தர்ஷினி சொல்ல அனைவரும் அமைதியாகி விடுகிறார்கள்.
"நாங்க எஸ்.கே.ஆர் வீட்டுக்கு போனதும் எங்களோட மூக்கை உடைக்க பின்னாடியே பெட்டியோட அனுப்பிவிட்டது நீங்க தானே" என வாய்க்கு வந்தபடி எல்லாம் ஈஸ்வரியிடம் குணசேகரன் எகிற அதை கேட்ட ஜனனியும் தர்ஷினியும் வருத்தப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion