Ethirneechal: மாமியாரை எதிர்த்து ஈஸ்வரி சவால்... குழந்தைகள் கொடுத்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? எதிர்நீச்சலில் இன்று
Ethirneechal Sep 27 promo : குழந்தைகள் பிளான் படி வீட்டை விட்டு வெளியேற திட்டம் போடும் பெண்கள். விசாலாட்சி அம்மா போட்ட கண்டிஷனை எதிர்க்கும் ஈஸ்வரி. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி இன்றைக்கு ஒரு நாள் மட்டும் போய் சமைத்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். அவர்கள் அனைவரும் பசியோடு இருப்பார்கள் என எவ்வளவு கெஞ்சியும் கதிர் மனது இறங்காமல் பசியில் சாகட்டும் என பேசுகிறான்.
நந்தினி - விசாலாட்சி:
ஹோமில் இருந்து வந்த மேற்பார்வையாளர் நந்தினியிடம் சண்டையிட்டு அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்கிறார். அதற்காக நந்தினி தனது தாலி செயினை கழற்ற கோபமான விசாலாட்சி அம்மா நந்தினியை அறைந்து விடுகிறார். நந்தினி அவரை எதிர்த்து பேச பெரிய சண்டையே நடக்கிறது.
வீட்டில் பெண்கள் அனைவரும் பழைய வீட்டில் எப்படி இருந்தார்களோ அதே போல திரும்பவும் அடக்கமாக வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என ஞானம் ஆர்டர் போடுகிறான். ஞானமும் குணசேகரன், கதிர் போல மாறியது பெண்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
வெண்பாவை பார்த்து விட்ட கதிர் யார் இந்த பொண்ணு என ஈஸ்வரியை கூப்பிட்டு கேட்கிறான். கரிகாலன் "இந்த பொண்ணு ஈஸ்வரி அக்கா முக ஜாடையில் இருக்கு இல்ல" என சொல்லி கதிரை இன்னும் கொஞ்சம் ஏத்தி விடுகிறான். "இதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என ஈஸ்வரி சொல்ல கதிர் ஈஸ்வரியிடம் சொல்லி தான் ஆகவேண்டும் என சண்டை போடுகிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீட்டு பெண்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது நந்தினி மிகவும் கவலையோடு இருக்கிறாள். அதை பார்த்த தாரா "நீங்க இங்க இருந்து போயிடுங்க அம்மா" என்கிறாள். " நீங்க இல்லாம இந்த வீடு எப்படி இருக்கும்னு இவங்களுக்கு புரியணும்" என்கிறாள் ஐஸ்வர்யா. "ஜனனி சித்தி நீங்க தானே ஐடியா குடோன். பட்டுனு முடிவு எடுத்து எல்லாரையும் தூக்குங்க" என்கிறாள் தாரா.
அடுத்த நாள் காலை அனைவரும் ஒரே இடத்தில் இருக்க விசாலாட்சி அம்மா அவர்களிடத்தில் " இனி இந்த வீட்டு பொம்பள ஒருத்தியும் வீட்டை விட்டு கால எடுத்து வெளியே வைக்க மாட்டாளுங்க" என்கிறார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய "இனிமே அத நான் முடிவு பண்றேன்" என ஈஸ்வரி சவால் விடுகிறாள். விசாலாட்சி அம்மா அதை கேட்டு முறைக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
வீட்டை விட்டு பெண்கள் அனைவரும் வெளியேறி சாதனை செய்ய வேண்டும் என்பது தான் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் தீவிர ரசிகர்களின் விருப்பம். சீரியலின் அடுத்த கட்டம் அதை நோக்கி தான் இருக்கும் என்பது பலரின் கணிப்பாக இருக்கிறது.