Siragadikka Aasai: பார்லர் அம்மாவை பார்த்து ஷாக்கான முத்து! வித்யா வீட்டில் மீனாவுக்கு வந்த சந்தேகம் - சிறகடிக்க ஆசையில் இன்று!
Siragadikka Aasai: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai ) இன்றைய (ஜூன் 5) எபிசோடில் வித்யாவை பார்த்து சினிமா சான்ஸ் பற்றி விசாரித்துவிட்டு அப்படியே கறி கொடுத்து விட்டு போகலாம் என மலேசியா மாமா வித்யா வீட்டுக்கு வருகிறார். அவரை பார்த்து வித்யா அதிர்ச்சியாகி தனியாக அழைத்து சென்று சமாளிக்கிறாள். அதற்குள் ஏதோ தெரிந்த குரல் போல இருக்கிறதே என மீனா வெளியில் வந்து பார்க்க அதற்குள் வித்யா மலேசியா மாமாவை அனுப்பி வைத்து விடுகிறாள்.
புரிந்து கொண்ட வித்யா:
மீனா துருவித்துருவி கேள்வி கேட்க அது அனைத்தையும் சமாளிக்கிறாள் வித்யா. பின்னர் இருவரும் சமைத்து சாப்பிடுகிறார்கள். அப்போது மீனா தனக்கென எந்த ஆசையும் இல்லாமல் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும், குடும்பத்தில் அமைதி இருக்க வேண்டும் என தன்னலம் இல்லாமல் பேசுவதை பார்த்து வித்யா ஆச்சரியப்படுகிறாள். ரோகிணி சொன்னது போல கிடையாது மீனா மிகவும் நல்லவள் என்பதை வித்யா புரிந்து கொள்கிறாள்.
ரோகிணி கிரிஷிடம் அன்பாக பேசுகிறாள். இனி எப்போதுமே ரோகிணி தன்னுடன் இருக்க வேண்டும் என கிரிஷ் தன்னுடைய ஆசையை சொல்ல இன்னும் கொஞ்ச நாளில் நான் உன்னை என்னுடன் வைத்து கொள்கிறேன். அதுவரையில் நான் தான் உன்னுடைய அம்மா என யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி வைக்கிறாள் ரோகிணி. கிரிஷ் தன்னுடைய கண் கட்டை பிரிக்கும் போது என்னுடைய அம்மா முகத்தை தான் நான் முதலில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக ரோகிணியிடம் கேட்கிறான். அவளும் சரி என சொல்கிறாள்.
பின்னர் ரோகிணி தன்னுடைய அம்மாவையும் கிரிஷையும் வேகவேகமாக வீட்டில் இருந்து கிளப்பி ஹோட்டலில் தங்க வைக்க கிளப்புகிறாள். அவர்களும் கிளம்பி வெளியில் வரும் நேரத்தில் முத்து வீட்டுக்கு வந்து விடுகிறான். அவனுடைய குரலை கேட்டதும் எதுவும் நடக்காதது போல நடிக்கிறாள் ரோகிணி. முத்து ரோகிணி வீட்டில் இருப்பதை பார்த்து ஷாக்காகிறான். நான் இன்னிக்கு லேட்டாக தான் போகணும் என சொல்லி சமாளிக்கிறாள் ரோகிணி.
பார்லர் அம்மா:
கிரிஷ்காக சாப்பாடு வாங்கி வந்து இருக்கிறான் முத்து. அதை அவனுக்கு கொடுக்க சொல்லி ரோகிணியின் அம்மாவிடம் கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறான். முத்து உள்ளே சென்றதும் ரோகிணி கிரிஷுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள். அதை பார்த்த முத்துவுக்கு இது பார்லர் அம்மா தானா என சந்தேகம் வந்து விடுகிறது. ரோகிணி வித்தியாசமாக நடந்து கொள்வது முத்துவுக்கு ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் இருக்கிறது.
மீனா வீட்டுக்கு வந்ததும் கிரிஷுக்கு ரோகிணி சாப்பாடு ஊட்டிவிட்டதை பற்றி சொல்கிறான். பின்னர் மீனா வித்யா வீட்டில் நடந்தது பற்றி சொல்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai ) சீரியல் கதைக்களம்.