மேலும் அறிய
Siragadikka Aasai : காணாமல்போன மீனா.. வாய்க்கொழுப்பாக பேசிய மனோஜ் - சிறகடிக்க ஆசை இன்றைய அப்டேட்
Siragadikka Aasai : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
Siragadikka Aasai Written Update : 'சிறகடிக்க ஆசை' இன்றைய (ஜூன் 10) எபிசோடில் முத்து கார் ஷெட்டுக்கு போனதும் அவனிடம் வந்து நண்பன் ஒருவன் பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டேன். அவளை சமாதானம் பண்ண வீட்டுக்கு போகும் போது ஏதாவது வாங்கிட்டு போகணும் என சொல்லி பணம் கேட்கிறான்.
முத்து தன்னுடைய பிரச்சனை பற்றி செல்வத்திடம் சொல்லவும் அவன் முத்துவை திட்டி நீயும் வீட்டுக்கு போகும்போது உன்னோட பொண்டாட்டிக்கு ஏதாவது வாங்கிட்டு போ என்கிறான்.
செல்வம் முத்துவை சாப்பிட ஒரு மெஸ்ஸுக்கு அழைத்து செல்கிறான். அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு சமையலை ஆஹா ஓஹோ என பாராட்டுகிறான். என்னோட பொண்டாட்டி என்னோட பொண்டாட்டி என அடிக்கடி மீனாவை பற்றி அவர்களிடம் பேசவும் ஒரு நாள் உங்கள் மனைவியை அழைத்து கொண்டு அங்கே வர சொல்கிறார்கள். அந்த மெஸ் ஸ்பெஷல் ஸ்வீட் ஒன்றை மீனாவுக்கு வாங்கி எடுத்து செல்கிறான் முத்து.
கல்யாணத்துக்கு சென்று வீடு திரும்பிய அண்ணாமலை மீனாவை தண்ணீர் கொண்டு வர சொல்ல, மீனா சொல்லாமல் எங்கோ ஊர் சுற்ற போய்விட்டாள் என சொல்கிறாள் விஜயா. காலையில் இருந்து வீட்டில் சமைக்க கூட இல்ல. எல்லாரும் பட்டினியாக தான் வேலைக்கு போனாங்க என சொல்கிறாள். அந்த நேரம் முத்து மீனாவை தேடிக்கொண்டே வீட்டுக்கு வர மீனா வீட்டில் இல்லாதது பற்றி அண்ணாமலை சொல்கிறார். முத்து மீனாவுக்கு போன் செய்து பார்த்தால் சுவிட்ச் ஆஃப் என வருகிறது.
ரவி, மனோஜ் ரோகிணி என அனைவரும் வீட்டுக்கு வருகிறார்கள். மனோஜ் ரொம்ப பசிக்குது இப்பவும் வீட்டில் சாப்பிட எதுவும் இல்லையா என ஓவராக பேசுகிறான். அவன் மட்டும் தான் மூளையை கசக்கி வேலை செய்வதாகவும், பிசினஸ் செய்வது அவ்வளவு ஈசியில்லை என்றும் திமிராக சொல்கிறான். மற்ற வேலைகள் எல்லாம் ஒன்னுமே கிடையாது என்னுடைய வேலை தான் பெருசு என சொல்லவும் ரவி டென்ஷனாகி மனோஜுடன் வாக்குவாதம் செய்கிறான். ரோகிணி மனோஜை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறாள்.
ரவி, மனோஜ் ரோகிணி என அனைவரும் வீட்டுக்கு வருகிறார்கள். மனோஜ் ரொம்ப பசிக்குது இப்பவும் வீட்டில் சாப்பிட எதுவும் இல்லையா என ஓவராக பேசுகிறான். அவன் மட்டும் தான் மூளையை கசக்கி வேலை செய்வதாகவும், பிசினஸ் செய்வது அவ்வளவு ஈசியில்லை என்றும் திமிராக சொல்கிறான். மற்ற வேலைகள் எல்லாம் ஒன்னுமே கிடையாது என்னுடைய வேலை தான் பெருசு என சொல்லவும் ரவி டென்ஷனாகி மனோஜுடன் வாக்குவாதம் செய்கிறான். ரோகிணி மனோஜை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறாள்.
மீனா ஒரு நாள் இந்த வீட்டில் இல்லை என்றால் எல்லாரும் பட்டினிதான். இப்போ மீனா அருமை புரிகிறதா என முத்து கேட்கிறான். ரவி நான் சென்று சமைக்கிறேன் என சொல்ல விஜயா அதெல்லாம் தேவையில்லை என சொல்லி ரோகிணியை அழைத்து சமைக்க சொல்கிறாள்.
முத்து மீனாவின் அம்மா வீட்டுக்கு போன் செய்து மீனாவிட போனை கொடுக்க சொல்கிறான். மீனா அங்கே வராதது பற்றி சீதா சொல்கிறான். வீட்டில் ஏதாவது பிரச்னையா? அக்காவை காணுமா? என கேட்கிறாள். அவர்கள் பயப்படக்கூடாது என்பதற்காக முத்து சமாளித்துவிடுகிறான். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த சத்யா முத்து தான் மீனாவிடம் சண்டை போடு இருப்பான். அதனால் அக்கா கோபமாகி வீட்டை விட்டு வெளியே போயிருக்கும் என சொன்னதும் மீனாவின் அம்மா டென்ஷனாகிறார். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion