Siragadikka Aasai serial August 24 : மீனா கிட்ட மாட்டிக்கிட்டா ரோகிணி.. பல்பு கொடுத்த மனோஜ்... சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today : ரோகிணியின் இரண்டாவது பிரசவம் பற்றி உண்மை தெரிந்ததும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா.

Siragadikka Aasai Serial August 24 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 24 ) எபிசோடில் மீனா பூ கொடுக்க போன இடத்தில் தனக்கு தெரிந்தவர்களை பார்க்கிறாள். அவர்கள் கொடுத்த ஐடியா படி முத்துவுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்ட பிறகு சண்டைக்கு முடிவு வந்ததா? என கேட்கிறார்கள்.
"மீனா : ருசியா சமைச்சு போட்டேன் அக்கா ஆனா அதுக்கு முன்னாடியே அவர் சமாதானமா போயிட்டார்" என சொல்ல அனைவரும் நீ கொடுத்து வைத்தவள் தான் என பாராட்டுகிறார்கள்.
அப்போது மீனாவுக்கு சீதாவிடம் இருந்து போன் வருகிறது. ஒரு ஐந்து முழம் பூ எடுத்துக்கொண்டு உடனே அவள் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு வர சொல்கிறாள் சீதா. மீனாவும் பூ எடுத்து போக "இனி இந்த ஹாஸ்பிடலுக்கு தினமும் உன்னையே பூ குடுக்க சொல்லிட்டாங்க அக்கா" என சீதா சொல்கிறாள். "ரொம்ப சந்தோஷம் சீதா. உனக்கு வேலையும் கிடைச்சுடுச்சு உன்னால எனக்கும் வியாபாரம் கிடைச்சுடுச்சு" என்கிறாள் மீனா.
"சீதா : அக்கா இனி என்னோட படிப்புக்காக நீ வாங்கின கடனை நானே அடச்சுக்குறேன். வீடு செலவையும் நானே பாத்துக்குறேன். எங்களுக்காக நீ உன்னோட படிப்பை விட்டுட்டு நிறைய கஷ்டப்பட்டுட்ட. உனக்கே நிறைய பிரச்சினை இருக்கு
மீனா: உன்னை இப்படி பாக்க சந்தோஷமா இருக்கு சீதா. சத்யாவும் உன்னை மாதிரி ஒரு வேலைக்கு போயிட்டா நல்லா இருக்கும். அப்பா மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா உன்னை பார்த்து பெருமை பட்டு இருப்பாரு" என சொல்ல இருவரும் கண்கலங்குகிறார்கள்.
அப்போது ரோகிணி செக் அப்புக்காக ஹாஸ்பிடலுக்கு வந்து காத்திருக்கிறாள். அவளை மீண்டும் அங்கே பார்த்ததும் மீனாவும் சீதாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். ரோகிணி டாக்டரை பார்க்க உள்ளே சென்றதும் சீதா போய் விசாரிக்கிறாள். முதலில் அந்த தகவல் எல்லாம் உனக்கு எதுக்கு என கேட்ட ஸ்டாப், நான் அவங்க ரிலேஷன் என சொன்னதும் "அவங்க செகண்ட் டைம் கன்சீவ் ஆகலனு செக் அப் பண்ண வந்து இருக்காங்க" என சொல்ல அதை கேட்டு சீதா ஷாக்காகிறாள். அதை மீனாவிடம் வந்து சொல்ல மீனாவும் அதிர்ச்சி அடைகிறாள். "இதை பத்தி இனி வேற யார்கிட்டேயும் விசாரிக்காத" என சீதாவிடம் சொல்லிவிடுகிறாள் மீனா. அதிர்ச்சியிலேயே வண்டியை ஓட்டிவர வழியில் வருபவர்களிடம் எல்லாம் தீட்டு வாங்கி கொண்டே வீட்டுக்கு வருகிறாள்.
முத்துவும் இரண்டாவது பிரசவத்துக்காக ஒருத்தவங்க சவாரி கேட்டு இருக்காங்க. நான் உடனே போகணும் என அவசர அவசரமாக கிளம்ப அவனிடமும் குழம்பி போய் பிரசவம் பற்றி விசாரிக்கிறாள். அவள் நடவடிக்கை அனைத்துமே குழப்பத்தில் இருக்க விஜயாவிடம் நன்றாக திட்டு வாங்குகிறாள்.
ரோகிணியும், மனோஜும் ஸ்வீட்டுடன் வீட்டுக்கு வருகிறார்கள். சந்தோஷமான விஷயம் என சொல்லவும் ரோகிணி நல்ல விஷயம் ஏதோ சொல்ல போகிறாள் என நினைத்து விஜயா சந்தோஷமாகிறாள். ஆனால் ஷோரூமில் வியாபாரம் நன்றாக நடந்து என சொல்லி கொடுக்கவும் விஜயா முகமே மாறிவிடுகிறது. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

