Siragadikka Aasai : பாட்டி சொன்ன சூப்பர் ஐடியா... முத்து - மனோஜ் இடையே மோதல்... சிறகடிக்க ஆசையில் இன்று.
Siragadikka Aasai : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியல் இன்றைய (மே 22) எபிசோடில் ரூம் கட்டுவது குறித்து அண்ணாமலை அனைவரையும் அழைத்து வைத்து பேசுகிறார். ஒவ்வொருவரும் அவரவரின் கருத்துகளை சொல்கிறார்கள். அடுத்ததாக ரூம் கட்டுவதற்கான பணம் குறித்த பேச்சு அடிபட அண்ணாமலை தன்னுடைய பென்ஷன் பணத்தில் காட்டுவதாக சொல்கிறார். மீனாவும் முத்துவும் அவரின் பென்ஷன் பணத்தில் கட்ட வேண்டாம். "அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு. மனோஜ் கொடுக்க வேண்டிய 27 லட்சத்தை கொடுத்த பிறகு பார்க்கலாம்" என முத்து சொல்கிறான்.
பாட்டியும் முத்து சொல்வது தான் சரி. உனக்கு என கொஞ்சம் பணம் இருப்பது தான் நல்லது. அதனால் நான் ஒரு முடிவை சொல்கிறேன் என்கிறார். "மூன்று பேரும் மாறி மாறி ஒவ்வொரு வாரம் ஹாலில் தங்கி கொள்ளுங்கள். அப்படி இருந்தால் மூன்று ஜோடிகளுக்கு ரூம் கிடைக்கும் " என சொல்கிறார். அதை கேட்டு மனோஜ் ரோகிணி முகமே மாறிவிடுகிறது. ரவி இந்த ஐடியாவுக்கு ஓகே என சொல்லிவிடுகிறான்.
பாட்டி மீனாவுக்கு அட்வைஸ் செய்கிறார். "எல்லா நேரத்திலும் விட்டு கொடுக்காத. உன்னோட உரிமையை நீ தான் எடுத்துக்க வேண்டும். எல்லா நேரத்திலும் அடங்கி போக வேண்டிய அவசியமில்லை. முத்துவையும் அப்போ தான் உன் பிடியில் வைத்து கொள்ள முடியும்" என சொல்கிறார் பாட்டி.
அடுத்த நாள் மனோஜ் மற்றும் ரோகிணி அவரவர்களின் பிரெண்ட்களை அழைத்து வந்து ஷோரூமை சுத்தி காட்டுகிறார்கள். "நீங்க நினைச்ச மாதிரியே உட்கார்ந்த இடத்தில் வேலை செய்ற மாதிரி ஒரு வேலையை தேடிகிட்டீங்க" என மனோஜ் பிரெண்ட் சொல்ல ரோகிணி முகமே மாறிவிடுகிறது. "மாமனாருக்கு சேர வேண்டிய பணத்தை உன்னுடைய பணம் என சொல்லி ஏமாத்திட்ட. உண்மை தெரிஞ்சா அவ்வளவு தான்" என ரோகிணி பிரெண்ட் பயமுறுத்துகிறாள்.
அன்று இரவு வழக்கம் போல மீனா ஹாலில் படுப்பதற்கு பாய் போட ஸ்ருதி வந்து "இந்த வாரம் நீங்க தானே ரூமில் படுக்கணும்" என கேட்கிறாள். "அவங்க வெளியில வரல. தூங்கிட்டாங்க போல" என மீனா சொல்ல முத்து அதை கேட்டு மனோஜை கத்தி வெளியில் வர வைக்கிறான். அடுத்ததாக வெளியில் ஏசி இல்லாத பிரச்சினை வருகிறது. ஸ்ருதி தன்னுடைய அம்மாவிடம் சொன்னால் உடனே ஏசி அனுப்பி வைப்பாங்க என சொல்கிறாள். அதெல்லாம் தேவையில்லை என அண்ணாமலை சொல்லி விடுகிறார். விஜயா மீனாவை அவமானப்படுத்தி பேச முத்து சரியான பதிலடி கொடுக்கிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) கதைக்களம்.