Siragadikka Aasai Serial June 29: ஸ்ருதியை பார்த்து ஆத்திரப்படும் விஜயா! மனோஜ் செய்த முட்டாள்தனம்! சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today : மனோஜ் பணத்துக்கு ஆசைப்பட்டு செய்த பெரிய வியாபாரத்தால் வரப்போகும் மிகப்பெரிய சிக்கல். இந்த முறை விஜயாவின் கோபத்துக்கு ஆளான ஸ்ருதி. சிறகடிக்க ஆசையில் இன்று.
Siragadikka Aasai Serial Today June 29: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஜூன் 29) எபிசோடில் மீனாவும் முத்துவும் மாடியில் செங்கலை அடுக்கி வைத்து தங்களுக்கான ரூமை கட்டுவது பற்றி சந்தோஷமாக பேசி கொண்டு இருக்கிறார்கள்.
"மீனா: நம்ம இரண்டு பேரும் சேர்ந்து இந்த ரூமை சீக்கிரம் கட்டிவிடுவோம். இனி நமக்கு ரூம் இல்லை என யாரும் சொல்ல முடியாது இல்ல.
முத்து: ஆமா இனி சொல்ல முடியாது" என்கிறான் முத்து.
மனோஜ் ஷோரூமுக்கு பல்க் ஆர்டர் கொடுத்த கஸ்டமர் வந்து தேவையான பொருட்களை வாங்கி கொள்கிறார். பொருட்களுக்கான பில்லை மனோஜ் தருகிறேன் என சொல்ல வந்த கஸ்டமர் பில் வேண்டாம் என்கிறார்கள். காரணம் புரியாமல் மனோஜ் குழப்பத்தில் இருக்கிறான்.
"கஸ்டமர்: இது கணக்கில் வராத கருப்பு பணம். அதனால் இதுக்கு பில் எல்லாம் தேவையில்லை. நீங்களும் இது போல பிசினஸ் செய்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். எத்தனை நாள் தான் கமிஷனுக்காக பிசினஸ் பண்ணுவீங்க?" என்கிறார்கள்.
முதலில் சற்று தயங்கிய மனோஜ் பிறகு சரி என சொல்லி 4 லட்சம் பணத்தை வாங்கி கொள்கிறான்.
"மனோஜ்: உங்க அட்ரஸ் கொடுங்க. நான் உடனே பொருட்களை டெலிவரி செய்ய சொல்கிறேன்.
கஸ்டமர்: அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம். நாங்களே வரும் போது வண்டியை எடுத்துக்கொண்டு வந்து விட்டோம். அதில் பொருட்களை எடுத்துச் சென்று விடுகிறோம்" என்கிறார்கள்.
மனோஜூம் சந்தோஷமாக அவர்களை வழியனுப்பி வைக்கிறான். பிறகு டீலருக்கு போன் செய்து எல்லா பொருட்களும் விற்று தீர்ந்து போச்சு. அதனால புதுசா சில பொருட்கள் வேணும். நான் செக் பண்ணிட்டு சொல்றேன் என்கிறான் மனோஜ்.
ஸ்ருதி வீட்டுக்கு மிகவும் அசதியாக வருகிறாள். அதனால் ரவி ஸ்ருதிக்கு கால் அமுக்கி விடுறான். பிறகு ஸ்ருதி காலில் நெய்ல் பாலிஷ் போட்டு விட சொல்கிறாள். ரவி அதை போட்டு கொண்டு இருக்க அங்கே வந்த விஜயா அதை பார்த்து கோபப்படுகிறாள். ரவியிடம் சென்று சத்தம் போடுகிறாள்.
"விஜயா: புருஷன் மேல கொஞ்சம் மரியாதை வேணாமா? லவ் இருந்தா கையில் போட்டு விட சொல்ல வேண்டியது தானே காலில் தான் போட்டு விடணுமா? என ஸ்ருதியை திட்டுகிறாள்.
ஸ்ருதி: இது தான் லவ் ஆண்ட்டி. நீங்களும் போய் அங்கிள் கிட்ட கொடுத்து உங்களுக்கும் நெய்ல் பாலிஷ் போட்டு விட சொல்லுங்க" என சொல்லி நெய்ல் பாலிஷ் கொடுத்து அனுப்புகிறாள்.
விஜயா அண்ணாமலையிடம் சென்று ஸ்ருதியை செய்வது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை என சொல்லி திட்டுகிறாள். அவரையும் வந்து ஸ்ருதியை கண்டிக்க சொல்கிறாள். ஆனால் அண்ணாமலை என்னால் என்னுடைய மரியாதையை கெடுத்து கொள்ள முடியாது என சொல்லிவிடுகிறார். காலம் மாறி போச்சு என விஜயாவுக்கு அட்வைஸ் செய்கிறார். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.