மேலும் அறிய

CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?

CM Vijay: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க, விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளார்.

CM Vijay: டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய் அங்கு புதியதாக நிறுவப்பட்டுள்ள பாரதியார் சிலையை  திறந்து வைக்க உள்ளார்.

நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார். புதியதாக அமையும் மாநில அரசு டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து மாநில அரசின் கோரிக்கைகளை வலியுறுத்துவதும், இணைந்து செயல்பட தயாராக இருப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை டெல்லி செல்லும் விஜய், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பல்வேறு மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளாரா. இதுபோக  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையும் திறக்கப்பட உள்ளது. குறைந்தது இரண்டு நாட்கள் இந்த பயணம் நீடிக்குமாம்.

நேரம் ஒதுக்கீடு..

நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீளும் கோரிக்கை பட்டியல்:

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள முதலமைச்சர் விஜய் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை எழுப்ப உள்ளாராம். அதில் நீண்ட நாட்களாக உள்ள கல்வி நிதி, மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், நிதி விடுவிப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளதாம். ஜி.எஸ்.டி. பங்கீட்டை தாமதமின்றி விரைந்து வழங்குவது, மத்திய மாநில அரசுகள் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களுக்கான நிதியை வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. இதுபோக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பது குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாம்.

காங்கிரஸ் தலைவர்கள் உடன் சந்திப்பு

மத்திய அரசு தரப்பினர் உடனான சந்திப்பை தொடர்ந்து,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கார்கே உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளார். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தவெக -காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தது. இது உள்ளாட்சி, நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெற உள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன் பிறகு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையும் திறக்கப்பட உள்ளது. இதற்காக நாளை காலை டெல்லி செல்ல உள்ள முதலமைச்சர் விஜயின் பயணத்திற்கான ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னெடுத்து கவனித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: Hyundai Creta: புதுசா பெருசா..! ஹைப்ரிட் டூ ADAS - SUVக்களின் கிங் க்ரேட்டாவில் வரும் டாப் 5 அப்க்ரேட்கள்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: முக்கிய நிர்வாகிகள் கல்தா.. உட்கட்சியில் வலுக்கும் மோதல்! என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?
EPS: முக்கிய நிர்வாகிகள் கல்தா.. உட்கட்சியில் வலுக்கும் மோதல்! என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?
குறட்டை குமார், மங்குனி, மரமண்டை, இரக்கமற்ற ஜந்து.! தவெக அரசை போட்டு பொளந்த திமுக
குறட்டை குமார், மங்குனி, மரமண்டை, இரக்கமற்ற ஜந்து.! தவெக அரசை போட்டு பொளந்த திமுக
Admk Ex Mla Govindasamy : தவெகவில் இணைந்த ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகிய மாஜி அதிமுக MLA.! இது தான் காரணமா.?
தவெகவில் இணைந்த ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகிய மாஜி அதிமுக MLA.! இது தான் காரணமா.?
Admk MLA Case : விஜய் போட்ட பிளான்.! சுக்கு நூறாக உடைக்க களத்தில் இறங்கிய இபிஎஸ்- 4 எம்எல்ஏக்கள் வழக்கில் அதிமுக ட்விஸ்ட்
விஜய் போட்ட பிளான்.! சுக்கு நூறாக உடைக்க களத்தில் இறங்கிய இபிஎஸ்- 4 எம்எல்ஏக்கள் வழக்கில் அதிமுக ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION
Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breakfast Scheme: இனி 8ஆம் வகுப்பு வரை காலை உணவு; முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு- எப்போது முதல்?
Breakfast Scheme: இனி 8ஆம் வகுப்பு வரை காலை உணவு; முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு- எப்போது முதல்?
EPS: முக்கிய நிர்வாகிகள் கல்தா.. உட்கட்சியில் வலுக்கும் மோதல்! என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?
EPS: முக்கிய நிர்வாகிகள் கல்தா.. உட்கட்சியில் வலுக்கும் மோதல்! என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?
பிராய்லர் கறி சாப்பிட்டால் சீக்கிரம் வயசுக்கு வந்துவிடுவார்களா? மருத்துவர் விளக்கம்!
பிராய்லர் கறி சாப்பிட்டால் சீக்கிரம் வயசுக்கு வந்துவிடுவார்களா? மருத்துவர் விளக்கம்!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? - சுட சுட இன்றைய வானிலை அப்டேட்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? - சுட சுட இன்றைய வானிலை அப்டேட்
"நாங்க இங்க நிம்மதியா வாழவே முடியல" - மினி வடமாநிலமாக மாறிவிட்டது .. உள்ளூர் மக்கள் புலம்பல்
Mercedes S-Class Hybrid: என்னய்யா சொல்றீங்க.? ஒரு பென்ஸ் கார் இவ்ளோ மைலேஜ் கொடுக்குதா.?! மிரட்டும் S கிளாஸ் ஹைப்ரிட்
என்னய்யா சொல்றீங்க.? ஒரு பென்ஸ் கார் இவ்ளோ மைலேஜ் கொடுக்குதா.?! மிரட்டும் S கிளாஸ் ஹைப்ரிட்
நீட் மறுதேர்வு: விண்ணப்பக் கட்டணம் மறுப்பா? NTA-வில் தொடரும் குளறுபடிகள்
நீட் மறுதேர்வு: விண்ணப்பக் கட்டணம் மறுப்பா? NTA-வில் தொடரும் குளறுபடிகள்
US Iran Peace Deal Impact: ஓகே ஆன அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்; இந்தியாவில் குறையும் பெட்ரோல், டீசல் விலை.?! எப்போது.?
ஓகே ஆன அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்; இந்தியாவில் குறையும் பெட்ரோல், டீசல் விலை.?! எப்போது.?
Embed widget