மேலும் அறிய

EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

அதிமுக-வில் அடுத்தடுத்து எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில், கட்சியின் பலம் குறையாமல் இருக்க எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல்பறந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழ்நாட்டை சுமார் கால் நூற்றாண்டுகள் ஆட்சி செய்த அதிமுக தற்போது சறுக்கல் பாதையில் உள்ளது.

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ-க்கள்:

ஜெயலலிதா மறைவு முதலே தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வரும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் வெறும் 47 எம்எல்ஏ-க்கள் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்றனர். 

சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்ட நிலையில், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத சூழலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்த எம்எல்ஏ-க்கள் கவலைக்கு ஆளானார்கள். 

சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக:

சிலர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்த நிலையில், நேற்று திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏ-க்களான சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். இந்த சூழலில், இன்று சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இன்று தவெக-வில் இணைந்தார்.

அதிமுக-வில் ஒரு சீரற்ற சூழல் நிலவி வரும் சூழலில், அடுத்தடுத்து எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து ஆளுங்கட்சியான தவெக-வில் ஐக்கியமாகி வருவது அந்த கட்சியின் தொண்டர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது. சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என ஒவ்வொரு பக்கமாக ஒவ்வொருவரும் சென்று தற்போது ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் ஐக்கியமாகிய நிலையில், மற்ற இருவரும் தனிக்கட்சி தொடங்கிய நிலையில், இப்போது உட்கட்சி மோதலால் அதிமுக சல்லி சல்லியாக நொறுங்கி வருகிறது.

என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

எடப்பாடி பழனிசாமி தலைமை மீது மிக கடுமையான விமர்சனங்களை பலரும் முன்வைத்து வரும் நிலையில், சொந்த கட்சி எம்எல்ஏ-க்களையே தக்கவைக்க இயலாத சூழலுக்கு அவர் ஆளாகியுள்ளார். பொதுக்குழுவை கூட்டி அவரது பொதுச்செயலாளர் பதவியை பறிக்க சிவி சண்முகம் தரப்பு முயற்சித்த நிலையில், சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்துடுத்து ராஜினாமா செய்வது மிகப்பெரிய தலைவலியை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படுத்தியுள்ளது. 

தனது தலைமை குறித்த விமர்சனம், கட்சியை கட்டுக்கோப்பாக வைப்பது, எம்எல்ஏ-க்களை தக்கவைப்பது, வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியை தொடங்குவது என சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர் தேர்தல் தோல்விகளுக்கு மத்தியில் தனது தலைமைக்கு சவால் அளிக்கும் வகையில் அடுத்தடுத்து கட்சியில் காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிக்கப்போகிறாரா முன்னாள் அமைச்சர்? சூடுபிடிக்கப்போது விசாரணை!
சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிக்கப்போகிறாரா முன்னாள் அமைச்சர்? சூடுபிடிக்கப்போது விசாரணை!
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரமுகர்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!
பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரமுகர்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget