மேலும் அறிய
Siragadikka Aasai Serial June 19 : விஜயா கழுத்து லாக் ஆயிடுச்சு... மீனாவும் முத்துவும் செய்த வேலை.. சிறகடிக்க ஆசை இன்று
Siragadikka Aasai serial today : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
Siragadikka Aasai serial June 19 : 'சிறகடிக்க ஆசை' இன்றைய எபிசோடில் விஜயாவின் டான்ஸ் ஸ்கூலுக்கு யாரும் வந்து சேரவில்லை என பார்வதியிடம் சொல்லி வருத்தப்பட்டு கொண்டு இருக்க அந்த நேரத்தில் காலிங் பெல் அடிக்கிறது. யார் என போய் பார்த்தால் தாம்பூல தட்டுடன் முத்துவும் மீனாவும் வந்து நிற்கிறார்கள். "உங்க கிட்ட டான்ஸ் கத்துக்கலாம் என வந்து இருக்கோம்" என அவர்கள் சொன்னதும் "இது ஒன்னும் பூ கட்டுற மாதிரி கார் ஓட்டுற மாதிரி வேலை எல்லாம் கிடையாது. இது பரதம். எல்லாராலையும் எல்லாம் ஆட முடியாது" என அவர்களை உதாசீனப்படுத்துகிறாள் விஜயா. "எங்களை முதலில் நீங்க ஆட வைச்சு பாருங்க, அப்புறம் வருதா வராதான்னு முடிவு பண்ணிக்கலாம்" என்கிறாள் மீனா.
பார்வதியும் விஜயாவை சமாதானம் செய்கிறார். "இதுவரைக்கும் யாரும் கத்துக்க வரல. வந்தவர்களையும் அனுப்புறது நல்லது இல்ல. அவங்க சொன்ன மாதிரி முதலில் செக் பண்ணி பாரு " என்கிறார். பின்னர் பாட்டு போட்டு மீனாவும் முத்துவும் ஆட அவர்களுடன் பார்வதியும் சேர்ந்து ஆடுகிறார். கோபமான விஜயா போய் பாட்டை நிறுத்திவிட்டு "அவன் இஷ்டத்துக்கு ஆடுறான். நிறுத்துங்க" என்கிறாள்."நீங்க சொல்லி கொடுத்தா அதே மாதிரி கத்துக்கிட்டு ஆடுவோம்" என மீனா சொல்ல விஜயா பரதம் ஆடி காட்ட அவளை பார்த்து மீனாவும் ஆடுகிறாள். ஆர்வமாக விஜயா ஆட திடீரென கழுத்தும் கையும் சுளுக்கி கொள்கிறது, கழுத்தை திருப்ப முடியாமல் கையை இறக்க முடியாமல் விஜயா அப்படியே போஸ் கொடுத்து நிற்கிறாள். பார்வதி சென்று சுளுக்கு எடுக்கும் அம்மாவை கூட்டிட்டு வரேன் என செல்கிறார்.
அதற்குள் முத்துவும் மீனாவும் விஜயாவை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். விஜயா இப்படி வருவதை பார்த்து அண்ணாமலை கிண்டல் செய்கிறார். பிறகு தான் முத்துவும் மீனாவும் விஜயாவுக்கு எப்படி இப்படி நடந்தது என சொல்கிறார்கள். மீனாவும் முத்துவும் வேண்டுமென்றே தான் இப்படி செய்தார்கள் என அவர்களை திட்டுகிறாள் விஜயா. "அவங்க வருத்தப்படுறாங்கன்னு தான் நாங்க கத்துக்கலாம் என போனோம். இப்படி ஆனதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்" என முத்து கேட்கிறான்.
அதற்குள் பார்வதி சுளுக்கு எடுக்கும் அம்மாவை அழைத்து வந்து விடுகிறார். ரூமுக்கு விஜயாவை அழைத்து செல்கிறார்கள். விஜயா உள்ளே கத்துவதை பார்த்து வெளியில் இருப்பவர்கள் பதட்டப்படுகிறார்கள். கையை மட்டும் சரி செய்துவிட்டு கழுத்து சரியாக ஒரு நாள் ஆகும் அது வரைக்கும் கையையும் கழுத்தையும் அசைக்காமல் வைத்து கொள்ள சொல்லி சொல்கிறார் சுளுக்கு எடுப்பவர். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion