(Source: ECI/ABP News/ABP Majha)
Akshitha engaged : 'கண்ணான கண்ணே' ப்ரீத்திக்கு நிச்சயதார்த்தம் : செல்லமாக கோவப்படும் ரசிகர்கள்!
Akshitha engaged : சின்னத்திரை நடிகை அக்ஷிதா திருமண நிச்சயதார்த்தம் முடிந்து அதன் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் நடிகைகளும் பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் கார் வாங்குவது, வீடு கிரஹப்பிரவேசம், நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்த ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் அதை ரசிகர்களுடன் பகிர்ந்து அவர்களின் ஆசியை பெற்று குடும்பத்தில் ஒருவராக இணைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும், கண்ணான கண்ணே, சுமங்கலி, அழகு, சீதா ராமன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அக்ஷிதா.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அக்ஷிதா முதன்முதலில் கன்னட சின்னத்திரையில் தான் அறிமுகமானார். 2017ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' சீரியல் மூலம் தான் தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில கன்னட திரைப்படங்களில் கூட நடித்துள்ளார். வெள்ளித்திரையில் பெரிய அளவு ஜொலிக்க முடியாததால் சின்னத்திரையிலேயே அவரின் கவனம் முழுக்க இருந்தது.
சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே' சீரியலில் ஹீரோயின் தங்கை ப்ரீத்தியாக அன்பான மகளாக, பாசமான சகோதரியாக பிரபலத்தின் உச்சிக்கு சென்றார். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கம்பீரமான தொழில் அதிபர் மேக்னாவாக சிறப்பாக நடித்திருந்தார். சீதா ராமன் சீரியலில் சீதாவின் அக்காவாக இப்படி பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை அக்ஷிதா.
இறுதியாக அக்ஷிதா நடித்து வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஒரு சில மாதங்கள் மட்டுமே வந்து போனாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனம் பெற்றார். அவர் கொலை செய்யப்பட்டதாக கதைக்களத்தில் அமைய அந்த சீரியலில் இருந்து விடைபெற்றார். அதற்கு பிறகு அவரை வேறு எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷிதா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என தெரிவித்து அதன் புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த ப்ரீத்தம் சுரேஷ் என்பவருடன் அக்ஷிதாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லையே என அக்ஷிதா ரசிகர்கள் செல்லமாக கோபித்துக் கொண்டாலும் வருங்கால தம்பதியினருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
விரைவில் அக்ஷிதா திருமண தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடிப்பாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். திருமணம் குறித்த அறிவிப்பையாவது முன்னரே சொல்லுங்கள் என கிண்டல் செய்து வருகிறார்கள் குசும்புத்தனமாக கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.