Seetha Raman: நான்சிக்கு சவால் விட்ட சீதா: கோபப்பட்ட ராம்: சீதா ராமன் இன்று!
சீதா எல்லோரும் திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தினால் நான்சியிடம் பேச வருகிறாள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்சி மகா வீட்டுக்கு வர, எல்லோரும் சீதாவை நான்சியிடம் பேச சொல்ல, அவள் நோ சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது சீதா எல்லோரும் திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தினால் நான்சியிடம் பேச வருகிறாள். ஆனால் நான்சி, நீ குற்றவாளி என்பது போல பேச, சீதா “ஒருவேளை இது மகாவா இருக்குமோ?” என சந்தேகப்படுகிறாள்.
மேலும் நான்சியிடம் “மகாவை நான் கொல்லவில்லை, என்னுடைய குழந்தை ஒரு கொலைகாரிக்கு பொறக்கக் கூடாது, நான் அப்படி பொறக்க விடவும் மாட்டேன். இந்த நிரபராதி சீதாவுக்கு தான் அந்தக் குழந்தை பிறக்கும். நான் தப்பு பண்ணலன்னு நிரூபித்துக் காட்டுகிறேன்” என்று சவால் விடுகிறாள்.
அதன் பிறகு அர்ச்சனா கல்பனாவிடம் “மகாவைக் கொன்றது நீ தானே?” என்று போனில் பேசிக் கொண்டிருக்க, அங்கே நான்சி வந்துவிட, அர்ச்சனா பதற்றம் அடைகிறார். “நான் பேசுனது எதையும் கேட்கலல்ல?” என்று பதற, நான்சி “நான் எதுவும் கேட்கல, காபி கேட்க தான் வந்தேன்” என்று சொல்கிறாள். அர்ச்சனா திரும்பத் திரும்ப கேட்க, போனில் இருந்த கல்பனா “இவளே மாட்டி விட்டுடுவா போல” என்று போனை வைத்து விடுகிறாள்.
அதன் பிறகு நான்சி சீதா குற்றவாளி என்பது போல பேசுகிறாள். “சீதாவுக்கு நிச்சயமா தண்டனை கிடைக்கும்” என்பது போல கூறுகிறார். அதைத் தொடர்ந்து ராம் மற்றும் சீதா ரூமுக்கு சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, இவர்களுக்குள் மீண்டும் கோர்ட்டு பிரச்சனை குறித்த பேச்சு எழ, ராம் கோபப்பட, சீதா கோபித்துக் கொண்டு சோபாவில் வந்து படுத்து விடுகிறார். இதனால் ராம் சீதாவிடம் வந்து கெஞ்சுகிறான்.
இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் நிறைவடைகிறது.