மேலும் அறிய

'Kadhanayagi' new show : சின்னத்திரையில் நடுவராக களம் இறங்கும் கே.எஸ். ரவிக்குமார்... 'கதாநாயகி' புத்தம் புது ரியாலிட்டி ஷோ ஆரம்பம்

கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நடுவர்களாக இருந்து நடத்தும் புதிய ரியாலிட்டி ஷோ 'கதாநாயகி' ஜூலை 29ம் தேதி முதல் துவங்க உள்ளது.  

புதுமைக்கு பெயர் போன தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. விதவிதமான வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் அவர்களை அடித்து கொள்ள ஆளே இல்லை. ஒரு நிகழ்ச்சி முடிவதற்கு முன்னரே அடுத்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாக துவங்கிவிடும். அதே போல தான் சீரியல்களும். முதல் பாகம் முடிந்தவுடன் அதன் இரண்டாம் பாகம் தொடங்கிவிடும். அந்த வரிசையில் புதிதாக ஒரு ரியாலிட்டி ஷோ துவங்க உள்ளது. அது தான் 'கதாநாயகி' நிகழ்ச்சி. 

Kadhanayagi' new show : சின்னத்திரையில் நடுவராக களம் இறங்கும் கே.எஸ். ரவிக்குமார்... 'கதாநாயகி' புத்தம் புது ரியாலிட்டி ஷோ ஆரம்பம்
சூப்பர் சிங்கர் மூலம் சிறந்த பாடகர், டான்ஸ் ஷோ மூலம் சிறந்த டான்சர், பேச்சு போட்டி மூலம் சிறந்த பேச்சாளர், குக்கிங் நிகழ்ச்சி மூலம் சிறந்த குக் போல் "கதாநாயகி" நிகழ்ச்சி மூலம் சிறந்த கதாநாயகியை தேர்வு செய்யும் போட்டியாக இது இருக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்ததாக இந்த கதாநாயகி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான முதல் ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்து பின்னர் வாய்ப்பு குறைந்த பல நடிகர் நடிகையர்கள் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து சக்சஸ்புல்லாக இருக்கிறார்கள். அந்த வகையில் முதல்முறையாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சின்னத்திரையில் நடுவராக களம் இறங்குகிறார். அவருடன் இணைந்து நடுவர் பேனலில் கதாநாயகியை தேர்ந்து எடுக்க உள்ளார் நடிகை ராதிகா. விஜய் டிவியில் வரும் ஜூலை 29ம் தேதி துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சி வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 

Kadhanayagi' new show : சின்னத்திரையில் நடுவராக களம் இறங்கும் கே.எஸ். ரவிக்குமார்... 'கதாநாயகி' புத்தம் புது ரியாலிட்டி ஷோ ஆரம்பம்

கதாநாயகி நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் ராதிகா மற்றும் கே.எஸ். ரவிக்குமார் இருவரும் காரில் இருந்து இறங்கி வர அவர்களை கடல் போல சூழ்ந்து உள்ளது ரசிகைகளின் கூட்டம். அனைவர் முகத்திலும் கண்ணம்மா, பாக்கியலட்சுமி, காவியா உருவம் கொண்ட மாஸ்குகள் அணிந்துள்ளனர். ரசிகைகள் நடுவர்களிடம் எங்களுக்கு இவர்களை போல ஒரு கதாநாயகியை தெரிந்து எடுத்து கொடுங்கள் என ரெக்வஸ்ட் செய்கிறார்கள். கே.எஸ். ரவிக்குமார், கதாநாயகியை தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கும் போல இருக்கே என சொல்ல ராதிகா பார்த்து கொள்ளலாம் என்று கூறுகிறார். 

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றால் உடனே அவர்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் இந்த 'கதாநாயகி' நிகழ்ச்சி மூலம் பங்கேற்கும்  போட்டியாளர்களும் விரைவில் செலிபிரிட்டிகளாக மாறிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்த நிகழ்ச்சி நிச்சயம் வார இறுதி நாட்களை குதூகலமாக வைத்து இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Embed widget