Meenakshi ponnunga: ஐஏஎஸ் பரீட்சையில் பாஸான சக்தி.. சதித்திட்டம் தீட்டும் புஷ்பா...மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
மீனாட்சியின் குடும்பத்துக்காக வெற்றி செய்யும் நல்ல விஷயங்களைப் பார்த்து மீனாட்சி வெற்றியின் போட்டோவை அங்கு மாட்டி இந்தக் குடும்பத்திற்கு இனி வெற்றி தான் தலைவன் என்று சொல்லுகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி வெற்றியின் கையில் சக்தி கட்டிய கயிறை அவிழ்த்து விட்ட நிலையில், அவன் சங்கிலியைப் போட்டு வெளுத்தெடுத்தான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது குறித்து பார்க்கலாம்.
மீனாட்சியின் குடும்பத்துக்காக வெற்றி செய்யும் நல்ல விஷயங்களைப் பார்த்து மீனாட்சி வெற்றியின் போட்டோவை அங்கு மாட்டி இந்தக் குடும்பத்திற்கு இனி வெற்றி தான் தலைவன் என்று சொல்லுகிறாள்.
இதனைத் தொடர்ந்து சக்திக்கு ஒரு பெண் போன் செய்து ஐஏஎஸ் எக்ஸாம் ரிசல்ட் வர இருக்கிறது என்று கூறுகிறாள். இந்த விஷயம் அறியும் புஷ்பா, சங்கிலியுடன் சேர்ந்து சக்தி ஐஏஎஸ் இன்டர்வியூ போக கூடாது என்று தடுக்க சதி திட்டம் தீட்டுகிறாள்.
சக்தி ஐஏஎஸ் பரிட்சையில் பாஸ் ஆன செய்தி வர சக்தி, துர்கா, யமுனா, மீனாட்சி ஆகியோர் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.