Meenakshi Ponnunga Aug 12: ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி.. வெற்றி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
துர்கா சக்திக்கு போன் செய்ய, வெற்றி எடுத்துப் பேசி “நான் வந்து பேசிக் கொள்கிறேன். சக்தியிடம் எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சொல்கிறான்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாட்சி வெற்றியிடம் பேசுவதற்காக ரங்கநாயகியின் வீட்டுக்கு வர, மீனாட்சியை பார்த்துவிட்டு வெற்றி, சரண்யாவிடம் நான் பூஜாவுடன் வெளியே சென்று இருப்பதாக சொல்லி விடுமாறு கூறுகிறான்.
மீனாட்சி அம்மா வர மீனாட்சி அம்மாவை பார்த்ததும் சரளா “அடிக்கடி ஏன் வருகிறீர்கள்?” என்று திட்ட, பின் ரங்கநாயகி மீனாட்சி அம்மாவைப் பார்த்து "கல்யாணம் முடிந்ததும் சக்தியை கூட்டிக் கொண்டு போய் விடுங்கள்" என்று சொல்கிறாள்.
இதை மாடியிலிருந்து பார்க்கும் வெற்றி, மீனாட்சி இடம் உண்மையை சொல்லப் போகிறேன் என்று கூற, “சக்தி இப்போதைக்கு வேண்டாம்” என்று கூறி விடுகிறாள்.
மறுபக்கம் சோகத்தில் மீனாட்சி அம்மாள் “சக்தியின் வாழ்க்கை இப்படி போய்விட்டதே” என மனம் வருந்தி தன் வீட்டு கோயில் முன் அமர்ந்து “இனி நான் யாரிடமும் பேச மாட்டேன், எதுவும் சாப்பிட மாட்டேன்” என விரதம் இருக்க, ரங்கநாயகி வீட்டில் பங்ஷனுக்கு கிரி டென்ஷனாக ஏற்பாடு செய்து கொண்டு இருக்க, சக்தி அவர்களை சமாதானம் செய்கிறாள்.
கோயில் முன் விரதம் இருந்த மீனாட்சி மயக்கம் அடைந்து விட ஊர் மக்கள் பதட்டம் அடைகிறார்கள். துர்கா சக்திக்கு போன் செய்ய, வெற்றி எடுத்துப் பேசி “நான் வந்து பேசிக் கொள்கிறேன். சக்தியிடம் எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சொல்கிறான்.
பங்க்ஷன் நேரத்தில் வெற்றி சக்தியிடம் சொல்லாமல் மீனாட்சியை பார்க்க செல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.