Maari Serial: வசமாக சிக்கிய அரவிந்த்.. ஜெகதீஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விபூதி அடித்த தாரா - மாரி சீரியல் அப்டேட்
Maari Serial: “இந்தப் பணத்தை திருடியது யாருனு எனக்கு தெரியும், அதற்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு” என்று சொல்லி அரவிந்தின் ஹெல்மெட்டை கொண்டு வந்து காட்ட வசமாக சிக்கி கொள்கிறான்.
Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெண்ணிலா மீது பழியை போட்டு பணத்தை திருடியதாக உறுதி செய்ய வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மாரி வெண்ணிலாவை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று நடந்தவற்றை விசாரிக்க, அப்போது அங்கு ஒரு ஹெல்மெட்டில் இருந்து உடைந்த துண்டு இருக்கிறது. இதைப் பார்த்த மாரிக்கு அரவிந்த் ஹெல்மெட் உடைந்து இருந்ததும், கையில் இருந்த பேக்கும் இந்த பேக்கும் ஒரே மாதிரி இருப்பதும் நினைவுக்கு வந்து வீட்டிற்கு வருகிறாள்.
“இந்தப் பணத்தை திருடியது யாருனு எனக்கு தெரியும், அதற்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு” என்று சொல்லி அரவிந்தின் ஹெல்மெட்டை கொண்டு வந்து காட்ட வசமாக சிக்கி கொள்கிறான். உடனே தாரா “ஏன் டா இப்படி பண்ண?” என்று அரவிந்தை அடித்து டிராமா போட்டு தப்பிக்க முயற்சி செய்கிறாள்.
அடுத்து மாரியும் சூரியாவும் ஜெகதீஷைப் பார்க்க ஸ்ரீஜா வீட்டிற்கு வருகின்றனர். அவளிடம் “யாராவது வீட்டிற்கு வந்தா எங்களுக்கு தெரியப்படுத்துங்க” என்று சொல்லி வீட்டிற்கு வர, தாராவுக்கும் சங்கரபாண்டிக்கும் ஜெகதீஷை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைவுக்கு வருகிறது. இந்த நேரத்தில் மாரி குங்குமத்தை கொண்டு வந்து கொடுத்து “அம்மன் குங்குமம் வச்சிக்கோங்க. தேவி அம்மா வர வரைக்கும் நீங்க உயிரோட இருக்கணும், அவங்க கையால் தான் நீங்க சாகணும்” என்று சொல்ல தாரா குங்குமத்தை தட்டி விடுகிறாள்.
இதையடுத்து தாராவும் சங்கரபாண்டியும் ஸ்ரீஜா வீட்டுக்கு வந்து குழந்தையை பார்க்க வந்ததாக ட்ராமா போடுகின்றனர். ஜெகதீஷ் அங்கு இருப்பதையும் கண்டுபிடித்து விடுகின்றனர். பிறகு தாரா விபூதியை கொண்டு வந்து மாரியிடம் கொடுத்து “உங்க மாமா ஜெகதீஷ் எங்க இருக்காருன்னே தெரியல, பாவம் அவரும் உங்க தேவி அம்மா போன இடத்துக்கே போய்டுவாரோ என்னமோ” என்று பேச மாரிக்கு சந்தேகம் வருகிறது.
உடனே ஸ்ரீஜாவுக்கு போன் போட்டு விசாரிக்க தாரா வந்துவிட்டுப் போன விஷயம் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.