Karthigai Deepam: உண்மையை அறிந்த சிவனான்டி! மாமியாரிடம் மாட்டிக்கொள்வானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
karthigai deepam: கார்த்திக் யார் என்ற உண்மை சிவனான்டிக்கு தெரிய வர சாமுண்டீஸ்வரியிடம் இருந்து கார்த்திக் எப்படி தப்பிக்கப்போகிறான்? என்ற விறுவிறுப்பு கார்த்திகை தீபத்தில் எழுந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதியும், கார்த்தியும் விசா ஆபிஸிற்கு கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையை அறிந்த சிவனான்டி:
அதாவது, ரேவதி வெளிநாடு கிளம்ப தயாராகுகிறாள். அதே போல் சிவனாண்டி ஊருக்கு வந்திருக்கிறான். அப்போது அபிராமி காஸ்மெட்டிக் கம்பெனியின் அருகே கார்த்திக் ஒரு வெள்ளைக்காரனுடன் கை கொடுத்து கொண்டு இருப்பது போல் ஒரு பேனர் இருக்கிறது.
இதை பார்த்த சிவனாண்டி ஷாக் ஆகி விசாரிக்க டிரைவராக இருப்பது ராஜா இல்ல கார்த்திக் என்ற விஷயம் தெரிய வருகிறது, ராஜசேதுபதியின் பேரன் என்ற விஷயத்தையும் அறிகிறாள். உடனே ஊருக்கு கிளம்புகிறான்.
கார்த்தி ஆபீசில் சாமுண்டீஸ்வரி:
ஊருக்கு வந்ததும் சந்திரகலாவை சந்தித்து மொத்த உண்மைகளையும் உடைக்கிறான். அதுமட்டுமின்றி சந்திரக்கலாவை வைத்து சாமுண்டீஸ்வரிக்கு உண்மைகளை தெரியப்படுத்த திட்டம் போடுகிறான்.
அவனது திட்டத்தின்படி வீட்டிற்கு வந்த சந்திரகலா நீ வா அக்கா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும் என்று சாமுண்டீஸ்வரியை கார்த்தியின் ஆபிஸிற்கு அழைத்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















