மேலும் அறிய

Karthigai Deepam: தீபா குறித்த உண்மையை உடைத்த கார்த்திக்: அபிராமி கேட்ட கேள்வி: கார்த்திகை தீபம் இன்று!

தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட, கார்த்திக் பின்னாடியே வர, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மாயா கார்த்தியை பார்க்க ஆபீஸ் வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது கார்த்திக்கை சந்திக்கும் மாயா “நான் நட்சத்திராவோட தங்கச்சி” என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். “மேடம், உன்னையும் தீபாவையும் பிரிக்காமல் விடமாட்டேன். உங்க வாழ்க்கைய உருக்குலைப்பேன்” என்று சவால் விடுகிறாள். அபிராமி வாயாலேயே தீபாவ வீட்டை விட்டு வெளியே விரட்டுவேன் என்று சொல்ல, கார்த்திக் “உன்னால முடிந்ததை பாத்துக்கோ” என பதிலுக்கு சவால் விடுகிறான். 

அதைத்தொடர்ந்து மாயா ஐஸ்வர்யா மற்றும் ரூபஸ்ரீ என மூவரும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்கின்றனர். “தீபாவின் வாழ்க்கையை அழிக்க நாம மூணு பேரும் சேர்ந்து தான் சில வேலைகள் செய்யணும்” என்று கை கோர்க்கின்றனர்‌. 

இதனைத் தொடர்ந்து வீட்டில் தீபாவின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, தீபாவின் பெயருக்கு ஒரு கொரியர் வருகிறது. கார்த்திக் “போய் வாங்கி பிரிச்சு பாருங்க” என்று சொல்லி அனுப்பி வைக்க, தீபாவும் அதை வாங்கி பிரிக்க உள்ளே புடவை இருக்கிறது. 

“அதை கட்டிக்கிட்டு கேக் கட் பண்ண வாங்க” என்று சொல்லும் கார்த்திக், புடவை கட்டிக் கொள்ளும்போது தீபாவிற்கும் உதவி செய்கிறான். அதோடு தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுவதாக சொல்ல, அவள் “உங்களுக்கு மேக்கப் போடத் தெரியுமா?” என்று கேட்க, அபிராமி “காஸ்மெட்டிக் கம்பெனி நடத்துறவனுக்கு மேக்கப் போடத் தெரியாதா? எங்க அம்மாவுக்கு எல்லாம் நிறைய நான் தான் மேக்கப் போட்டு விட்டு இருக்கேன்” என்று சொல்லி தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுகிறான். 

பிறகு பர்த்டே பார்ட்டி தொடங்குகிறது. தீபா கேக்கை வெட்ட அருணாச்சலம் “பல்லவி வரதா சொன்னீயே, எங்கே?” என்று கேட்க தீபா அதிர்ச்சி அடைகிறாள். “யார் வரப் போறாங்கன்னு தெரியலையே” என்று யோசிக்க கார்த்திக், தீபா தான் அந்த பல்லவி என்ற உண்மையை உடைக்க, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட, அபிராமி “இவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருக்கனா நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரியா இருப்ப” என கோபப்படுகிறாள். பிறகு கார்த்திக் “தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா, இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு அடிச்சு சத்தியம் செய்ததால் யார்கிட்டயும் சொல்லாம இருந்தா, அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன்” என்று சொல்கிறான். 

அதுமட்டுமின்றி “நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன்” என்று சொல்ல, அபிராமி “நம்ம கம்பெனியில் பாடுனா போதாதா?” என்று கேட்க “மற்ற கம்பெனிகளில் பாடினால் தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை” என்று சொல்கிறான்.

இதைத்தொடர்ந்து தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட, கார்த்திக் பின்னாடியே வர, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா. “நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும் இதைப் பற்றி சொல்ல தான்” என்று கண் கலங்கி அழுகிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல்  எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget