Karthigai Deepam: வீட்டுக்கு வந்த தீபா.. அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் இன்று!
தர்மலிங்கம் குடும்பமும் வீட்டுக்கு வர, “இனிமே தீபாவுக்கு எந்த பிரச்னையும் இல்ல, அவ வாழ்க்கை நல்லபடியா இருக்கும்” என சந்தோசப்படுகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமி மற்றும் தீபா என மூவரும் வீட்டுக்கு திரும்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மீனாட்சி, “வீட்டுக்கு வந்துட்ட நேராக போய் விளக்கேத்திட்டு வா” என்று சொல்ல, தீபா, அபிராமி அனுமதி இல்லை என்று ஏற்கெனவே சொன்னதை நினைத்து தயங்க, “இனிமே இந்த வீட்டில் உனக்கு எந்த தடையும் இல்லை” என்று சொல்கிறாள். பிறகு தீபா பூஜையறைக்கு சென்று விளக்கேற்றுகிறாள்.
அதனைத் தொடர்ந்து தர்மலிங்கம் குடும்பமும் வீட்டுக்கு வர, “இனிமே தீபாவுக்கு எந்த பிரச்னையும் இல்ல, அவ வாழ்க்கை நல்லபடியா இருக்கும்” என சந்தோசப்படுகின்றனர். அடுத்து அபிராமி காபி கேட்க, தீபா கிச்சனுக்கு சென்று காபி போட்டு கொடுத்து சமையல் வேலைகளையும் பார்க்கிறாள்.
தர்மலிங்கம் குடும்பம் வீட்டிற்கு கிளம்ப, மீனாட்சி, “வந்தது வந்துடீங்க அப்படியே முதலிரவுக்கான ஏற்பாடுகளையும் பண்ணிட்டு போங்க, இன்னைக்கு நல்ல நாள் தான்” என்று சொல்ல, ஐஸ்வர்யா இடையில் புகுந்து “அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்” என்று பேச, மீனாட்சி “போய் காலெண்டர் எடுத்து பாரு, இன்னைக்கு நாள் நல்லா இருக்கு” என்று பதிலடி கொடுத்து ஆஃப் ஆக்குகிறாள்.
அதன் பிறகு தர்மலிங்கம் கார்த்திக்கிடம் “நீங்க ரொம்ப நல்லவர், என் பொண்ணை ரொம்ப நல்லா பார்த்துக்குவீங்கன்னு எனக்கு தெரியும், அவளுக்காக நிறைய பண்ணி இருக்கீங்க” என்று நன்றி சொல்கிறார். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.