Karthigai Deepam: தோல்வியடைந்த ஆக்சிடென்ட் பிளான்.. ஐஸ்வர்யா ஷாக்.. தீபாவுக்கு சிக்கல்.. கார்த்திகை தீபம் இன்று!
Karthigai Deepam Oct 07: கார் ஓரிடத்தில் நிற்க லாரி கார் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து ட்ரைவர் ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, பிளான் சக்ஸஸ் என ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி சென்ற காரை லாரி ஒன்று துரத்தத் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது கார் ஓரிடத்தில் நிற்க லாரி கார் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து ட்ரைவர் ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, பிளான் சக்ஸஸ் என ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் ஐஸ்வர்யாவிடம் வந்து “அம்மா எங்கே?” என்று கேட்க, “வெளியே போய் இருக்காங்க” என்று சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு கார் ட்ரைவர் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து “கார் ஆக்சிடென்ட் ஆகிருச்சு, ஆனால் அபிராமி மேடம்க்கு ஒன்னும் ஆகல, அவங்க காஞ்சிபுரம் போய்ட்டாங்க” என்று சொன்னதும் ஷாக் ஆகிறாள்.
பிறகு குணாவுக்கு போன் போட்டு தீபாவை கடத்த வேண்டும் என்று சொல்ல, அவனும் ஓகே சொல்கிறான். தீபா வீட்டுக்கு வந்த அபிராமி, ஜானகி, மைதிலியிடம் “தீபா எங்கே” என்று கேட்க, கோயிலுக்கு சென்றிருப்பதாக சொல்ல தீபாவுக்காக காரில் காத்திருக்கிறாள்.
மறுபக்கம் குணாவின் ஆட்கள் தீபாவை கடத்த முயற்சி செய்கின்றனர். இப்படியான பரபரப்பான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.