Karthigai Deepam: தீபாவை அழைக்க செல்லும் அபிராமி.. ஐஸ்வர்யா போட்ட திட்டம்.. பரபரப்பான கட்டத்தில் கார்த்திகை தீபம்!
Karthigai Deepam Oct 05: ஐஸ்வர்யா “தீபா தான் அவன் மனசை மாத்தி இருக்கா” என்று கோர்த்து விட, அபிராமி, “கார்த்தி நானே எது சொன்னாலும் அவன் யோசித்து தான் முடிவு எடுப்பான்” என பதிலடி கொடுக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அமெரிக்கா செல்வதாக சொல்ல, ஐஸ்வர்யா “தீபா தான் அவன் மனசை மாத்தி இருக்கா” என்று கோர்த்து விட, அபிராமி “கார்த்தி நானே எது சொன்னாலும் அவன் யோசித்து தான் முடிவு எடுப்பான்” என பதிலடி கொடுக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் “கார்த்திக்கு தீபாவை புடிக்கும்னு எனக்கு தெரியாம போயிடுச்சு, நானே போய் அவளை கூட்டிட்டு வரேன். இந்த விஷயத்தை நீ வீட்டில் யார் கிட்டயும் சொல்லக்கூடாது” என்று சொல்ல, இதை மீனாட்சி கேட்டு விடுகிறாள்.
அதைத் தொடர்ந்து மீனாட்சி கார்த்தி இடம் சென்று “என்ன தம்பி, நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல.. அமெரிக்காவுக்கு கிளம்பிட்டீங்களா? எனக்கு என்னமோ நீங்க போக முடியாது என்று தான் தோணுது” என கிண்டல் அடிக்கிறாள்.
பிறகு மீனாட்சி தீபாவுக்கு போன் செய்து “உன்னை கூப்பிடுவதற்காக அபிராமி அங்க காஞ்சிபுரம் கிளம்பி வராங்க” என சொல்ல அதைக் கேட்டு தீபா சந்தோஷப்படுகிறாள்.
மேலும் அபிராமி கிளம்பியதும் ஐஸ்வர்யா கூலிப்படைக்கு போன் செய்து அபிராமியின் போட்டோ மற்றும் அவள் செல்லும் காரின் போட்டோவை அனுப்பி “உயிருக்கு ஆபத்து வராமல் அவங்கள சும்மா தட்டி விடுங்க, அவங்க காஞ்சிபுரம் போக கூடாது” என சொல்லி போனை வைக்கிறாள்.
ஒரு பக்கம் தீபா மற்றும் மீனாட்சி இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, மறுபக்கம் அபிராமி வரும் காரை லாரி ஒன்று துரத்தி வருகிறது. இப்படியான பரபரப்பான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: BiggBoss 7 Tamil Promo: ‘இன்னைக்கு கலவரம் கன்ஃபார்ம்” .. பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்..!