Karthigai Deepam: கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல முடிவெடுத்த மீனாட்சி.. ட்விஸ்ட் கொடுத்த தீபா - கார்த்திகை தீபம் இன்று!
Karthigai Deepam Oct 17: ஐஸ்வர்யா “இதுக்கு தான் உனக்கு போன் பண்றது இல்ல” எனத் திட்ட, “நவராத்திரி முடியட்டும் நான் என்ட்ரி கொடுக்கிறேன், அந்த தீபாவை விரட்டிடலாம்” என்று சொல்கிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மீனாட்சியிடம் சென்று ரூபஸ்ரீ குறித்து கேட்க அவள் ஷாக்கான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மீனாட்சி “ஆமாம் தம்பி அவ வேற யாரையோ வச்சி தான் பாடிட்டு இருக்கா” என்று தீபாவை மனதில் நினைத்துக் கொண்டு சொல்ல, கார்த்திக் “அந்தப் பொண்ணு யார்?” என்று கேள்வி கேட்க, மீனாட்சி தீபா தான் என்று சொல்ல வரும்போது அங்கு வரும் தீபா “அது பல்லவி என்ற பொண்ணு தான்” என்று சொல்லி உண்மையை மறைக்கிறாள்.
பிறகு மீனாட்சி உண்மையை சொல்லி இருக்க வேண்டியது தானே என்று தீபாவை திட்ட, “இப்ப இருக்கிற சூழ்நிலையில் இந்த உண்மையை சொல்ல முடியாது, அப்படி சொன்னா அதை கார்த்திக் சார் எப்படி எடுத்துபாருனும் தெரியல” என்று சொல்லும் அவள், “ஒருநாள் கண்டிப்பா உண்மையை சொல்லுவேன்” எனவும் பதில் கொடுக்கிறாள்.
இதனைத் தொடர்ந்து ரூமுக்குள் ஐஸ்வர்யா “தீபாவுக்கு எதிராக இருந்த அபிராமியையும் ஆப் பண்ணிட்டாங்க, இப்போ நான் என்ன பண்ணுவேன்?” என யோசித்து அவளது அம்மா கீதாவுக்கு போன் செய்து ஒரு ஐடியா கேட்க , அவள் “பாக்கியராஜ் படத்துல இப்படி பண்ணுவாங்க, அதே மாதிரி பண்ணலாம்” என படத்தின் காட்சிகளை சொல்கிறாள். ஐஸ்வர்யா “இதுக்கு தான் உனக்கு போன் பண்றது இல்ல” எனத் திட்ட, “நவராத்திரி முடியட்டும் நான் என்ட்ரி கொடுக்கிறேன், அந்த தீபாவை விரட்டிடலாம்” என்று சொல்கிறாள்.
அதன் பிறகு கார்த்திக் தீபா கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்திருக்க, தீபா கார்த்திக்கிடம் நன்றி சார் என்று சொல்ல, “இப்படியே மரியாதையாவே பேசிட்டு இருந்தா வாழ்க்கை புல்லா இப்படியே இருக்கா வேண்டியது தான்” என்று சொல்கிறான், பிறகு தீபா அவளது ரூமுக்கு வர ரூம் பூட்டி இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.





















