Karthigai Deepam: புது கேரக்டரில் என்ட்ரி கொடுக்கும் சாமிநாதன்.. அடுத்த திருப்பம்.. கார்த்திகை தீபம் இன்று!
எல்லாரும் ரிசார்ட்டுக்கு கிளம்ப, மீனாட்சி மாடர்ன் உடையில் ரெடியாகி தீபாவையும் மாடர்ன் உடையில் வர சொல்ல, அவள் எனக்கு இதெல்லாம் செட்டாகாது என்று மறுப்பு தெரிவித்து விடுகிறாள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் தீபாவை சந்தித்து தனக்காக பாடி தர சொல்லி விலை பேச தீபா மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது கார்த்தியும் தீபாவும் ரூமில் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென அபிராமி “அதெல்லாம் வேண்டாம், நமக்கு சரி வராது” என்று அருண் ஐஸ்வர்யாவிடம் சத்தம் போட, கார்த்திக் வெளியே வருகிறான். அருண் ரிசார்ட் ஒன்றை வாங்கப் போவதாக சொல்ல அபிராமி “இந்த பிசினஸில் நமக்கு அனுபவம் கிடையாது, வேண்டாம்” என்று சொல்கிறாள்.
உடனே அருண் “ஐஸ்வர்யா கார்த்திக் ஏதாவது புது பிசினஸ் பண்ணா மட்டும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏத்துக்கறீங்க, எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி சொல்றீங்க?” என்று வாக்குவாதம் செய்ய, கார்த்திக் நாம எல்லாரும் ரிசார்ட்டில் போய் ஒரு வாரம் தங்கி இருக்கலாம். அந்த ரிசார்ட் பற்றி தெரிந்து கொண்டு அதன் பிறகு வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்” என்று சொல்ல எல்லாரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். த்
இதனைத் தொடர்ந்து எல்லாரும் ரிசார்ட்டுக்கு கிளம்ப, மீனாட்சி மாடர்ன் உடையில் ரெடியாகி தீபாவையும் மாடர்ன் உடையில் வர சொல்ல, அவள் எனக்கு இதெல்லாம் செட்டாகாது என்று மறுப்பு தெரிவித்து விடுகிறாள். கார்த்திக் - தீபா காரில் சென்று கொண்டிருக்கும் போது கார்த்திக் “உங்களைக் கேக்காமல் ரிசார்ட் போலாம்னு சொன்னதில் உங்களுக்கு ஒன்னும் கோபமில்லையே” என்று கேட்க, அதெல்லாம் இல்லை சார் என்று சொல்கிறாள். மேலும் மனதுக்குள் “நாம் ரெண்டு பேரும் தனியா போய் இருக்கலாம்” என்று நினைக்க கார்த்திக் அதை அப்படியே சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறான்.
பிறகு எல்லாரும் ரிசார்ட் வந்து இறங்க, ரிசார்ட் மேனேஜராக பிரபல நடிகர் சுவாமிநாதன் என்ட்ரி கொடுக்கிறார். எப்படியாவது இந்த ரிஸார்ட்டை இவர்களிடம் விற்று விட வேண்டும் என கணக்கு போட்டு அருண் என நினைத்து கார்த்திக்கிடம் ரிசார்ட் பற்றி ஓவர் பில்டப் படுத்திப்பேச, கார்த்திக் கடையில் நான் அருண் இல்லை என்று பல்பு கொடுக்கிறான்.
அடுத்து மீனாட்சியின் கணவர் என்ட்ரி கொடுத்து எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Muthukaalai: “மதுபானம் பத்தி ஆராய்ச்சி பண்ண போறேன்.. 2 பேரையாவது மீட்கணும்..” 3 டிகிரி வாங்கிய முத்துக்காளை உருக்கம்!