Karthigai Deepam: தீபாவுக்கு எதிராக சினேகா சதி.. அபிராமியிடம் இருந்து தப்பிக்கப் போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்று!
Karthigai Deepam Dec 01:மீனாட்சி “கார்த்திக்கு போன் பண்ணி சொல்லு” என்று சொல்ல, இவள் “அவர் நம்பர் ரீச் ஆகல, நான் ஆபிசில் சொல்லிட்டு வரேன்” என்று கிளம்பிச் செல்கிறாள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு போட வேண்டிய நேரத்தை சொல்லி அந்த சமயம் மூன்று மருமகள்களும் இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது மீனாட்சி, தீபாவிடம் விஷயத்தை சொல்ல அவ “நான் லீவ் சொல்லிடுறேன்” என்று சொல்கிறாள். மீனாட்சி “கார்த்திக்கு போன் பண்ணி சொல்லு” என்று சொல்ல, இவள் “அவர் நம்பர் ரீச் ஆகல, நான் ஆபிசில் சொல்லிட்டு வரேன்” என்று கிளம்பிச் செல்கிறாள்.
ஆபிசில் லீவ் கேட்க, சினேகா “நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, கார்த்தியோட பி.ஏ வாக நீங்க தான் அந்த வேலையை செய்து முடிக்கணும், ரெண்டு மணி நேரம் தான் அந்த வேலை. அதன் பிறகு நீங்க வீட்டுக்கு போய்டுங்க” என்று சொல்கிறாள். இதனால் தீபாவும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவிக்கிறாள்.
அடுத்து மீனாட்சியிடம் விஷயத்தை சொல்ல, அவள் “சரியான டைம்க்கு இங்க வந்துடு, இல்லனா அபிராமி அத்தை பெரிய பிரச்சனை பண்ணிடுவாங்க” என்று சொல்ல, தீபா வந்து விடுவதாக சொல்லி வேலைக்கு கிளம்பிச் செல்கிறாள். வேறொரு ஆபிசில் பைலை கொடுக்க சொல்லி ஸ்நேகா வெளியே அனுப்ப தீபாவும் கிளம்பி வருகிறாள்.
பிறகு சினேகா இந்த ஆபிஸ்க்கு போன் செய்து “தீபா இன்னைக்கு முழுக்க அங்க தான் இருக்கணும், அவளை காக்க வையுங்கள்” என்று சதித் திட்டம் தீட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Annapoorani Review: சாதிக்கும் துடிப்புடன் கரண்டி பிடித்த நயன்.. அறுசுவை விருந்து படைத்தாரா.. அன்னபூரணி விமர்சனம்!