Karthigai Deepam: தீபாவை மாற்றிய பல்லவி.. கார்த்திக்கு நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்று!
மீனாட்சி தீபாவிடம் “இதெல்லாம் ரொம்ப தப்பா போயிட்டு இருக்கு, நீ போய் அந்த பல்லவி கிட்ட என்னனு பேசு” என்று சொல்லி அனுப்புகிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவி பாடி முடிக்க கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது மீனாட்சி தீபாவிடம் “இதெல்லாம் ரொம்ப தப்பா போயிட்டு இருக்கு, நீ போய் அந்த பல்லவி கிட்ட என்னனு பேசு” என்று சொல்லி அனுப்புகிறாள். அதனைத் தொடர்ந்து தீபா பல்லவி ரூமுக்குள் வருகிறாள். அவளிடம்“யாரு நீ? எதுக்காக இங்க வந்த?” என்று கேள்வி கேட்க “என்னை மன்னிச்சுடுங்க, குடும்ப வறுமை காரணமாக தான் வந்தேன்.
என் தம்பிக்கும் உடம்பு சரியில்லை” என்று சொல்ல, டிராமா போட தீபா யோசிக்க பல்லவி மைண்ட் வாய்ஸில் “இவகிட்ட இப்படி தான் எமோஷனலாக பேசி நடிக்கணும் அப்போ தான் நாம தப்பிக்க முடியும்” என்று நினைக்கிறாள். தீபாவும் மனம் மாறி “சரி பாடிட்டு இங்க இருந்து கிளம்பிடனும், திரும்பவும் வரக் கூடாது” என்று வார்னிங் கொடுக்கிறாள்.
பல்லவியும் “இல்ல அக்கா வரமாட்டேன்” என்று வாக்கு கொடுக்க தீபா மீனாட்சியிடம் வந்து விஷயத்தை சொல்ல, ”அவள் நீ என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க” என்று திட்டுகிறாள். தீபா “இல்ல அக்கா அவளால் எந்த பிரச்னையும் வராது” என மீனாட்சியையும் சமாதானம் செய்து விடுகிறாள்.
மறுபக்கம் கார்த்திக் ரூமுக்குள் அமர்ந்து சிதம்பரம் சொன்ன விஷயங்களை நினைத்து பார்த்து கொண்டிருக்கிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Ra. Sankaran: தமிழ் சினிமாவில் அடுத்த சோகம்.. உடல்நலக்குறைவால் மூத்த இயக்குநர் ரா.சங்கரன் காலமானார்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

