Karthigai Deepam Aug 30: தாலி, இந்த வாழ்க்கை வேண்டாம்.. தீபா எடுத்த அதிரடி முடிவு...ஷாக்கான கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
ஜோதியும் தீபாவை சமாதானம்செய்ய முயற்சி செய்ய முடியாமல் போக, தர்மலிங்கம் தீபாவிடம் கோபப்பட்டு அபிராமி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து குடும்பத்தோடு வெளியேறுகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்காக எல்லாரும் கோயிலில் கூடியிருக்கும் நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது ஐஸ்வர்யாவின் சதி வேலைகள் ஃபெயிலர் ஆனதைத் தொடர்ந்து, கார்த்திக் தீபா கழுத்தில் மாற்று தாலியை போட போகும் கடைசி நொடியில் ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி தடை போடும் தீபா, “நான் என் மேல எந்தத் தப்பும் இல்லைனு நிருபிக்கும்னு முடிவு பண்ணேன், அதை நிரூபித்தும் விட்டேன்.
இனிமே எனக்கு இந்த தாலியும் வேண்டாம் இந்த வாழ்க்கையும் வேண்டாம்” என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள், கார்த்திக், ஏன் தீபா என்னாச்சு என்று கேட்க, “என்னை மன்னிச்சுடுங்க சார்” என்று மன்னிப்பு கேட்கிறாள். தர்மலிங்கம், “தம்பி நான் தீபா கிட்ட கொஞ்சம் தனியா பேசட்டுமா” என்று அனுமதி கேட்க, கார்த்திக், “என்ன சார் நீங்க இதெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க, போய் பேசுங்க” என்று சொல்கிறான்.
தீபாவை தனியாக அழைத்துக் கொண்டு போன தர்மலிங்கம், “என்னமா ஆச்சு உனக்கு, எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு. இனிமேலாவது உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கனும்னு தான் நாங்க இவ்வளவு ஏற்பாடுகளை பண்ணோம்” என்று சொல்ல, பதில் பேசாமல் நிற்கிறாள் தீபா
ஜோதியும் தீபாவை சமாதானம்செய்ய முயற்சி செய்ய முடியாமல் போக, தர்மலிங்கம் தீபாவிடம் கோபப்பட்டு அபிராமி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து குடும்பத்தோடு வெளியேறுகிறார். தீபா கண்ணீருடன் நிற்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.