Madhumitha: என்னது ஜெயிலுக்கு போறாங்களா மதுமிதா? - போக்குவரத்து துறை விளக்கம்
Madhumitha: எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா காரை இயக்கிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் லீட் ரோலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் வேகமாக வந்து எதிரில் வந்த காவல்காரர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார் என்றும், அது சம்பந்தமாக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வந்தது. மேலும் அவர் வாகனத்தை மது போதையில் ஓட்டி வந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து தெளிவான விளக்கம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுருந்தார் நடிகை மதுமிதா.
இந்நிலையில் காவலர் மீது காரை மோதிய விபத்தில் நடிமை மதுமிதாவிற்கும் கிடைக்கும் தண்டனைகள் என்னவென்ற பேச்சு அடிபட்டு வந்தது. விபத்தினால் மதுமிதாவுக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டால் எதிர்நீச்சல் சீரியலில் யார் நடிப்பார் என்ற கேள்வியும் எதிர் நீச்சல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் துறையினர் ஊடகத்திடம் தெரிவித்திருப்பதாவது, ” விபத்து நடந்ததும் மதுமிதா மற்றும் தன்னுடன் வந்தவருடன் சேர்ந்து காயமடைந்த காவலர் ரவிக்குமாரை விபத்து ஏற்பட்டவுடனே மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தினால் கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டதற்கு சிகிச்சை பெற்று வந்த காவலர் ரவிக்குமார் தற்போது டிஸ்சார்ஜாகி வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த விபத்துக்குள் சிக்கிய நடிகை மதுமிதாவின் சொகுசு காரை பறிமுதல் செய்து பிரேக் டெஸ்ட்டுக்காக வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டோம்.
அதேபோல் விபத்துக்குள்ளான காருக்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால், நடிகை மதுமிதாவிடமே காரை கொடுத்து விட்டோம். அதேநேரத்தில், விபத்து நடந்த தினத்தில் நடிகை மதுமிதா மது அருந்தி காரை ஓட்டவில்லை என்பதை விசாரணை மூலம் உறுதி செய்துள்ளோம். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் விதிக்கும் அபராதத் தொகையை மதுமிதா நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். இந்த விபத்தில் ஒருவேளை உயிர்சேதம் ஏற்பட்டிருந்தால்தான் அதிகபட்ச தண்டனை நீதிமன்றத்தால் நடிகை மதுமிதாவுக்கு வழங்கப்பட்டு இருக்கும்” என தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்ளில் நடிகை மதுமிதா மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட்டது என புரளியைக் கிளப்பிவிட்டனர். அதற்கு நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பதில் அளித்துள்ளார். அதில் தான் மது அருந்து விட்டு வாகனத்தை இயக்கவில்லை என தெரிவித்துள்ளார்.