Britto Mano : தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு விலகிய பிரிட்டோ மனோ... இன்று முதல் புதிய பாண்டி யார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'தவமாய் தவமிருந்து' சீரியலில் பிரிட்டோ மனோ நடித்து வந்த பாண்டி கதாபாத்திரம் மாற்றப்பட்டது. புதிய பாண்டியாக நடிகர் சுதர்சனம் இன்று முதல் இணையவுள்ளார்.
சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஏராளமான புதுமையான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒரு தொடராக ஏராளமான ரசிகர்களை பெற்ற ஒரு சீரியல் 'தவமாய் தவமிருந்து'. இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் ஒரு தாயும் தந்தையும் தனது பிள்ளைகள் படும் கஷ்டத்தையும் மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.
இரண்டு மகள் மற்றும் இரண்டு மகன்களை கொண்ட இந்த தம்பதியினரின் மகள் மலர், பாண்டியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள். கல்யாணம் ஆன புதிதில் அவர்கள் இருவரும் அன்னியோன்யமாக இருந்தாலும் நாட்கள் போக போக அவர்களுக்கு இடையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகிறது அதனால் மலரின் பெற்றோர் கவலைப்படுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையை சரி செய்ய மலரின் அப்பா முயற்சிகளை செய்து வருகிறார். பாண்டி மாமனாருக்கு மிகவும் பிடித்த மருமகனாக இருந்து வருகிறார்.
இந்த சீரியலில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரிட்டோ மனோ மற்றும் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தியா இருவரும் ரீல் ஜோடிகளாக இருந்து போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் தான் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டது.
அதற்கு பிறகும் இருவரும் இணைந்து தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வந்தார்கள். ஆனால் தற்போது பாண்டியாக நடித்த பிரிட்டோ மனோ கதாபாத்திரத்தில் நடிகர் சுதர்சனம் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி ஒன்று வெளியானது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவர் சிப்பிக்குள் முத்து, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, வேலைக்காரன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இன்றைய எபிசோடில் இருந்து இந்த மாற்றம் நடத்தப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி தவமாய் தவமிருந்து சீரியலில் இருந்து பிரிட்டோ மனோ வெளியேறியதற்கும் வேறு ஒரு நடிகரை மாற்றியதற்கும் என்ன காரணம் என்பது வெளியாகவில்லை. பிரிட்டோ மனோ சந்தியா இருவருக்கும் இடையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ அதனால் தான் அவர் சீரியலை விட்டு விலகிவிட்டாரோ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள். உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என யூகித்து கொண்டே இருக்கின்றனர். இருப்பினும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாண்டி கதாபாத்திரத்தில் இனி பிரிட்டோ மனோ நடிக்க போவதில்லை என்பதை ரசிகர்கள் ஏற்று கொள்ள கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதேபோல புதிதாக பாண்டியாக நடிகர் சுதர்சனத்தை மக்கள் ஏற்றுக் கொள்வோம் சில நாட்களாகலாம்.