Bhagyalakshmi Serial: ராதிகா செய்த சிறப்பான சம்பவம்.. புலம்பி தவித்த கோபி... இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
Bhagyalakshmi Serial Written Update Today (06.12.2022): பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவை நினைத்து தனது நண்பரிடம் கோபி புலம்பி தவிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவை நினைத்து தனது நண்பரிடம் கோபி புலம்பி தவிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.
ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
படிப்பில் மார்க் குறைந்ததற்காக இனியாவை டியூஷன் சேர்க்க பாக்யா முடிவு செய்து அதற்காக பீஸ் கட்டுகிறார். அவளை கோபி டியூஷனுக்கு அனுப்புகிறாரா இல்லையா என்ற பதட்டத்தோடு வாசலில் நின்று இனியா வருகையை எதிர்பார்க்கிறார். ராமமூர்த்தியோடு வரும் இனியா அம்மாவிடம் டியூஷன் போறோம்ன்னு சொல்லிடுங்க என சொல்கிறாள். அவ்வளவுதானே என சொல்லிவிட்டு ராமமூர்த்தி நடுரோட்டில் நின்று கத்த பாக்யா சந்தோஷப்படுகிறார்.
View this post on Instagram
நண்பனை சந்திக்கும் கோபி வேறு ஏதாவது பிசினஸ் செய்யலாம் என தோன்றுவதாக சொல்கிறார். என்னவென்று அவர் நண்பன் விசாரிக்க, ராதிகா அளவுக்கு மீறி செலவு செய்கிறாள். அந்த வீட்டுல பாக்யா கையில 10000 தான் கொடுத்தேன். இங்க ஒரு லட்சம் கொடுத்தாலும் பத்தாது போல. எனக்கு ராதிகா செலவு பண்றதே பிடிக்கல என கோபி சொல்கிறார். எங்களுக்கு கூட தான் நீ கல்யாணம் பண்ணது பிடிக்கல என நண்பர் விமர்சிக்க என்னோட கஷ்டத்தை சொல்ல வந்தா நீயும் இப்படி பண்றீயே என புலம்புகிறார்.
ஜெனியின் அம்மா அவரைப் பார்க்க வீட்டுக்கு வருகிறார். நாளைக்கு எங்க சொந்தக்காரங்க எல்லாரும் வர்றாங்க என சொல்கிறார். ராமமூர்த்தியும், இந்த வீட்டுல எவ்வளவோ பிரச்சனை நடந்து போச்சு. நல்ல காரியம் நடக்கட்டும். அவங்களை வர சொல்லுங்க என தெரிவிக்கிறார். விருந்தினர்களை கவனிக்கும் வகையில் செழியன் பொருட்கள் வாங்கி வருகிறார். அப்போது ரோட்டில் நிற்கும் கோபி ஓடி வந்து உதவுகிறார். உடனே செழியன் வீட்டில் ஜெனிக்கு விஷேசம் நடக்கவிருப்பதை கூறுகிறார். இதனால் மகிழ்ச்சியடையும் கோபி எனக்கு என் பசங்க முக்கியம் தான் என, என்னால இப்ப வர முடியலன்னு வருத்தமா இருக்கு என ஃபீல் பண்ணுகிறார்.
விருந்தினருக்காக ஏற்பாடுகளை செய்யும் பாக்யாவை சந்திக்கும் எழில், வர்ஷினி திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் பாக்யாவிடம் எந்த வேலைக்கு சென்றாவது நான் உன்னை நல்லா பாத்துக்குறேன் என சொல்ல, பாக்யா சத்தம் போடுகிறார். இப்படியான காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.