மேலும் அறிய

Bhagyalakshmi Serial: எழிலின் காதலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈஸ்வரி; பலிக்குமா பாக்கியாவின் எண்ணம்.. பரபரக்கும் பாக்கியலட்சுமி சீரியல்!

Bhagyalakshmi Serial Written Update Today (03.12.2022): செல்வி தான் செகரட்டரி தேர்தலில் அக்காவின் பெயரை சொன்னேன் என சொல்கிறார். இதற்கு ஜெனி ஆதரவு தெரிவிக்க, ஈஸ்வரி வேணாம்  என மறுக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் எழிலின் காதல் விவகாரம் ஈஸ்வரிக்கு தெரிய வரும் காட்சிகள் இடம் பெறுகிறது. நாளுக்கு நாள் இந்த சீரியல் விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.

அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

கோபத்தில் பாக்யா 

ஏரியா அசோசியேஷன் மீட்டிங்கில் அனைவரும் அடுத்த செகரட்டரி தேர்தலில் பாக்யாவை நிற்க சொல்லி தெரிவிக்கின்றனர். மீட்டிங் முடிந்ததும் வீடு திரும்பும் பாக்யா, செல்வியிடம் சண்டைப் போட்டுக் கொண்டே வருகிறார். இதனிடையே ஜெனி கர்ப்பமாக இருப்பதால் அவரது உடல் எடையை அதிகரிக்குமாறு அட்வைஸ் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஈஸ்வரி, பாக்யாவின் பேச்சை கேட்டு அதிர்ச்சியாகி என்ன நடக்கிறது என விசாரிக்கிறார். 

செல்வி தான் செகரட்டரி தேர்தலில் அக்காவின் பெயரை சொன்னேன் என சொல்கிறார். இதற்கு ஜெனி ஆதரவு தெரிவிக்க, ஈஸ்வரி கேட்டரிங் வேலையும் பார்த்து, வீட்டுலேயும் வேலை பார்க்கணும் அதெல்லாம் வேணாம்  என மறுக்கிறார். இதற்கிடையில் நாளைக்கே போய் இதெல்லாம் சரியா வராது என நான் சொல்லப் போறேன் என பாக்யா தெரிவிக்கிறார். 

இதன்பின்னர் பாக்யா, எழில் இருவரும் வங்கிக்கு சென்று கேட்டரிங் காண்டிராக்ட் சம்பந்தமாக ரூ.7 லட்சம் லோன் கேட்கின்றனர். வங்கி மேனேஜரும் சரி நான் செக் பண்ணி பாத்துட்டு சொல்றேன். 2 நாள் கழிச்சு வாங்க என சொல்ல பாக்யாவுக்கு லோன் கிடைக்குமா என சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் அதெல்லாம் கிடைக்கும் என எழில் சமாதானப்படுத்துகிறார். 

ஈஸ்வரி எடுத்த சபதம் 

கோபி வீட்டில் மயூ, இனியாவுக்கு ராமமூர்த்தி கதை சொல்லுகிறார். அப்போது பாட்டி உங்களிடம் பேசக் கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா அம்மா நீங்க நல்லவங்கன்னு சொன்னாங்க என வெகுளியாக கூறுகிறார். இதைக் கேட்டு வருத்தப்படும் ராமமூர்த்தி, பெரியவங்க பண்ண தப்புக்காக சின்ன பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க என தெரிவிக்கிறார். 

வீட்டில் ஈஸ்வரி, செழியன், ஜெனி 3 பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனிக்கு செழியன் பழம் வெட்டிக் கொடுப்பதை எழில் எடுத்து சாப்பிட்டு ஜாலியாக விளையாடுகிறார். திடீரென போனை பார்த்ததும் எழில் முகம் வாடிப் போகிறது. இதனைப் பார்க்கும் ஈஸ்வரி என்னவென்று கேட்க,  சட்டென்று செழியன் உனக்கென்ன லவ் ஃபெயிலியரா? ஏன் தாடி வளர்த்துட்டு இருக்க என கேள்வியெழுப்புகிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத எழில், நீ சும்மா உளராத என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார். ஆனால் ஈஸ்வரி சந்தேகம் எழ, செழியனிடம் உண்மையா இருக்குமோ என கேட்கிறார். ஜெனி நிலைமையை சமாளிக்க பாடுபடும் நிலையில், செழியன் அமிர்தா-எழில் இடையேயான காதலை சொல்லி விடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஈஸ்வரி, எப்படி இதெல்லாம் நடக்கும்ன்னு நான் பார்க்குறேன் என சபதம் எடுக்கும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget