Bhagyalakshmi Serial: ‘கோபியை இந்த வீட்டுல இருந்து பிரிச்சி காட்டுறேன்’ ...ராதிகாவிடம் சவால் விட்ட இனியா..!
Bhagyalakshmi Serial Written Update Today (30.11.2022): வீட்டுக்கு செல்லும் பாக்யா குடும்பத்தினரிடம் ஸ்கூலுக்கு போனதில் இருந்து கோபி வீட்டுக்கு சென்றது வரை சொல்கின்றார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா கோபி வீட்டிற்கு வந்து இனியாவை பார்க்க வேண்டும் என சொல்லும் காட்சிகள் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.
அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கோபி - பாக்யா வாக்குவாதம்
இனியாவை தேடி பாக்யா கோபி வீட்டுக்கு செல்கிறார். வாசலில் நின்று இனியா பெயரை சொல்லி கத்தியதும் கோபி டென்ஷனாகிறார். அம்மா வந்ததை கண்டதும் இனியா செல்ல முயல, நீ அங்க போனதும் உன்ன கேள்வி மேல் கேள்வி கேப்பாங்க என சொல்லி விட்டு ரூமை லாக் செய்கிறார்.உடனே பாக்யா நான் என் மகளை பார்க்கணும் என சொன்னதும் அதெல்லாம் முடியாது என கோபி கறாராக சொல்கிறார். நான் அவளோட அம்மா என சொல்லவும் நான் அவளோட அப்பா..இது என் வீடு..நீ யாரு என் மகளை பார்க்க கோபியும் பதிலுக்கு எகிறுகிறார். என்ன உன் மகளை பார்க்க முடியலன்னு சொன்னது பதறுதா. அப்படித்தானே அன்னைக்கு நாடகம் போட்டு என்னை துரத்தி விட்ட என கோபி தன் கோபத்தை எல்லாம் கொட்டுகிறார்.
அன்னைக்கு என்கிட்ட என்னெல்லாம் பேசுன நான் தனியா நின்னு காட்டுவேன் என சொன்னியே இன்னைக்கு என்ன ஆச்சு. நீ வேண்டாம்ன்னு தானே இனியா என்கிட்ட வந்தா. அவளை நான் பார்க்க விடமாட்டேன் என சொல்ல பாக்யா அழுது புலம்புகிறார். நீயெல்லாம் ஒரு ஆளா என எழில் பதிலுக்கு எகிற, ராமமூர்த்தியும் கோபியை இனியாவை பாக்யாவிடம் காட்டு, நீ பயந்த மாதிரி தானே அவளும் பயப்படுறா என மல்லுக்கு நிற்கிறார். ஆனால் யார் பேச்சையும் கோபி கேட்பதாக இல்லை. இனியாவும் ரூமில் அழுதுக் கொண்டே அம்மா நீ இங்க இருந்து போ என கூறுகிறார். பின்னர் எழில் பாக்யாவை வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார்.
இனியா போட்ட சவால்
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு செல்லும் பாக்யா குடும்பத்தினரிடம் ஸ்கூலுக்கு போனதில் இருந்து கோபி வீட்டுக்கு சென்றது வரை சொல்கின்றார். ஆனால் இனியாவை பார்க்கவே முடியல என பாக்யா தரையில் அமர்ந்து அழுது புலம்ப, ராமமூர்த்தி உள்ளே வருகிறார். அவர் இனியாவுக்கு ஒன்னும் ஆகல. மேலும் இனியா உன்கிட்ட வந்துருவான்னு பயத்துல அவன் வெளியே விடமாட்டுக்கான் என பாக்யாவை சமாதானப்படுத்துகிறார்.
பின்னர் கோபி வீட்டுக்கு வரும் ராமமூர்த்தியிடன் எங்க போய்ட்டு வர்றீங்க என இனியா கேட்க, அம்மாவை போய் பார்த்துட்டு வர்றேன் என அவர் சொல்கிறார். அம்மா அழுறாங்களா என கேட்க, ராமமூர்த்தி கோபத்தில் அவ வீட்டுக்கு வந்தும் நீ அம்மாகிட்ட பேசலல என கூறுகிறார். நான் அம்மா கிட்ட பேசிட்டா அப்பா எப்படி நம்ம கூட வருவாரு என இனியா சொல்ல, ராமமூர்த்தி குழம்புகிறார். என்ன சொல்ற நீ என கேட்க, நான் அம்மாகிட்ட பேசிட்டா அப்பா எப்படி நம்ம வீட்டுக்கு வருவாங்க. அவங்களை இங்கிருந்து கூட்டிட்டு போகத்தான் நான் பேசல என இனியா கூற, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராதிகா அதிர்ச்சியடைகிறார்.
என்ன பேசுற நீ, நானும் கோபியும் கல்யாணம் பண்ணிட்டோம். உங்க அம்மா டைவர்ஸ் வாங்கிட்டாங்க. பின்ன எப்படி நீ அவரு அந்த வீட்டுக்கு வருவாருன்னு சொல்லலாம் என கொந்தளிக்க, ராமமூர்த்தி இனியா தான் சின்ன பொண்ணு..புரியாம பேசுறா நீ என்னடான்னா அவகிட்ட சண்டைக்கு போற என சொல்கிறார். ஆனால் இனியா அப்பாக்கு நம்ம மேல கோபம் இல்ல.அம்மா மேல மட்டும் தான். அதனால் நான் அவரை இங்க இருந்து கூட்டிட்டு போறேன் பாருங்க என சவால் விடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.