மேலும் அறிய

Bhagyalakshmi Serial:‘கடைசியில நினைச்சது நடந்துடுச்சி’....கோபியால் வீட்டை விட்டு வெளியேறும் இனியா...!

Bhagyalakshmi Serial Written Update Today (16.11.2022): . செழியன் அப்பாக்கு எப்படி விஷயம் தெரியும் என கேட்க, நான்தான் சொன்னேன் என இனியா சொல்ல அனைவரும் கோபமடைகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் அனைவரும் திட்டியதால் இனியா வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

பாக்யாவை கண்டு அதிர்ச்சியடையும் இனியா 

பள்ளியில் செல்போன் கொண்டு வந்த விவகாரத்தில்இனியாவை பெற்றோரை அழைத்து வர சொன்ன விஷயம் தெரிந்து பாக்யா அங்கு செல்கிறார். ஆனால் கோபி வந்ததாக பள்ளி முதல்வர் சொல்ல பாக்யா அதிர்ச்சியடைகிறார். உடனே பாக்யா அவர் ஆபீஸ்ல இருந்து அப்படியே வந்துருப்பாருன்னு நினைக்கேன் என சொல்ல,ஏற்கனவே ஸ்கூல் கட் அடிச்சிட்டு படத்துக்கு போன விஷயத்துல இனியா மேல பிளாக் மார்க் இருக்கு. இனி இப்படி பண்ணா பப்ளிக் எக்ஸாம் எழுத முடியாது பார்த்துகோங்க என முதல்வர் கண்டிக்கிறார். அங்கிருந்து வெளியே வரும் பாக்யா இனியா வீட்டில் சொன்னதை எல்லாம் நினைத்து பார்க்கிறார். அப்போது அங்கு வரும் இனியா அம்மாவை கண்டு ஷாக்காகிறார். இன்னைக்கு என்னை ஸ்கூலுக்கு வர சொன்னாங்களா என கேட்க, ஆமா என இனியா தெரிவிக்கிறார். அதனால நீ உங்க அப்பாவை கூப்பிட்டு வந்துருக்க என பாக்யா சொல்ல, இனியா சமாளிக்க பார்க்கிறார். எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம் என சொல்லிவிட்டு பாக்யா செல்கிறார். 

வீட்டில் நடக்கும் சண்டை 

அடுத்ததாக வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்யா இனியா பள்ளிக்கு போனதை பற்றி ஈஸ்வரி கேட்கிறார். உடனே இந்த வீட்டுல இவளுக்கு என்ன குறைச்சல். படிக்கிறதுக்கு அனுப்புனா அங்க போய் தப்பு மேல தப்பு பண்றா. வீட்டுல இருந்து ஆளை கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க. பிராடுத்தனம் பண்ணிருக்கா. இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இவளோட கூட படிக்கிற நிகிலாவோட அம்மா எனக்கு போன் பண்ணி நடந்ததை சொன்னாங்க என நடந்ததை எல்லாம் பாக்யா சொல்கிறார். எல்லாரும் இனியாவை கண்டிக்க, நான் டீசி கொடுப்பாங்கன்னு பயந்து கூட்டிட்டு போய்ட்டேன் என இனியா தெரிவிக்கிறார். 

எழில் நான் தான் காலையில உன்னை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டேன். என்கிட்ட சொல்லலாம்ல என கேட்கிறார். அங்க போனா கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க என பாக்யா சொல்லிவிட்டு இனியாவை அடிக்கிறார். எல்லாரும் தப்பு பண்ணா சொல்ல வேண்டிதானே என அட்வைஸ் பண்ணுகிறார்கள். செழியன் அப்பாக்கு எப்படி விஷயம் தெரியும் என கேட்க, நான் தான் சொன்னேன் என இனியா சொல்ல அனைவரும் கோபமடைகின்றனர். அப்பா வந்து என்ன திட்டல..இங்க வந்தா எல்லாரும் திட்டுறீங்க என இனியா கூறுகிறார். 

வீட்டை விட்டு வெளியேறும் இனியா 

இதைக்கேட்டு உடனே ஈஸ்வரி அடிக்க வந்து உன்னை பத்தி எதுவும் யோசிக்காம போன கோபி உனக்கு பெருசா போய்ட்டானா..அவன் வேணும்னா நீ அப்படியே போயிரு இங்க இருந்து என சொல்ல இனியா அதிர்ச்சியடைகிறார். அப்பா என்னை இருந்த வரை யாரும் என்ன திட்டுனதே இல்ல. இப்ப எல்லாரும் என்னை அடிக்க வர்றீங்களே என இனியா சொல்கிறார். டிராமா போடாத என பாக்யா சொன்னதுக்கு நீங்க தான் டிராமா போடுறீங்க என இனியாவும் பதிலுக்கு வாக்குவாதம் செய்கிறார். 

இதனிடையே பாக்யா வீட்டில் சண்டை போடும் சத்தம் கேட்டு கோபி அங்கு வருகிறார். நான் போறேன் என இனியா கத்த, போ வெளியே என ஈஸ்வரி பதிலால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். எதிரே வரும் கோபியிடம் எல்லாரும் என்னை அடிக்கிறாங்க..திட்டுறாங்க என குறை சொல்ல, எழில் இனியா நீ வா என அழைக்கிறார். உடனே வா நான் என்னன்னு கேக்குறேன் என கூறி உள்ளே அழைத்து செல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Embed widget