மேலும் அறிய

Bhagyalakshmi Serial: இனியாவுடன் சேர்ந்த கோபி...அதிர்ச்சியில் பாக்யா..இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ் இதோ..!

Bhagyalakshmi Serial Written Update Today (15.11.2022):இனியா பாக்யாவுக்கு போன் செய்யாமல் கோபிக்கு போன் செய்து பள்ளிக்கு அழைக்கிறார். அவரின் பதற்றத்தை புரிந்து கொண்ட கோபி உடனடியாக வருவதாக கூறுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பள்ளியில் இனியா மற்றும் அவரது சக தோழிகள் செய்த தவறு குறித்து பாக்யாவுக்கு உண்மை தெரிய வரும்  காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.

இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

கோபியை அழைக்கும் இனியா 

பள்ளியில் சக மாணவிகள் வீட்டில் இருந்து பெற்றோர்களை அழைத்து வந்த நிலையில் இனியா மட்டும் அழைத்து வராமல் இருக்கிறாள். இதனால் சாயங்காலத்துக்குள்ள வீட்டுல இருந்து ஆள் வரலைன்னா டீசி வாங்கிட்டு போயிரு என பள்ளியின் முதல்வர் தெரிவிக்க இனியா ஷாக்காகிறார். உடனே சக மாணவிகள் ஏன் வரலைன்னு கேட்க, நான் சொல்லவேயில்லையே என கூறுகிறார். ஆபீஸ் ரூம்ல போன் இருக்கும்ல அதுல இருந்து கூப்பிட்டு பாரு என ஐடியா சொல்ல, அங்கு செல்லும் இனியா பாக்யாவுக்கு போன் செய்யாமல் கோபிக்கு போன் செய்து உடனடியாக பள்ளிக்கு அழைக்கிறார். 

அவரின் பதற்றத்தை புரிந்து கொண்ட கோபி உடனடியாக வருவதாக கூறிவிட்டு பாக்யா எப்பபாரு வேலையில பிசியா இருப்பா என அவரைப் பற்றி இனியாவிடம் திட்டுகிறார்.

அம்ரிதாவுக்கு கிடைத்த ஆறுதல் 

அம்ரிதாவுக்கு போன் செய்யும் பாக்யா எழில் சொன்னதை வைத்து என்னவென்று கேட்கிறார். அதற்கு அம்ரிதா எங்க அப்பா,அம்மா பயப்படுறாங்க. அன்னைக்கு எழிலை வீட்டுக்கு வராதன்னு சொன்னப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு என தன் பக்கம் நடந்தவற்றை விவரிக்கிறார். நானும் உங்க வீட்டுல வந்து பேச முடியாத நிலையில இருக்கேன் என சொல்லி அம்ரிதாவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் பாக்யா எழிலை நம்பு.கண்டிப்பா அவன் உன்னை கைவிட மாட்டான் என உறுதியளிக்கிறார். இதனால் அம்ரிதா நிம்மதியடைகிறார்.

வசமாக சிக்கிய கோபி

பள்ளிக்கு வரும் கோபி இனியாவிடம் நடந்ததை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்கிறார். பின் பள்ளி முதல்வரை சந்தித்து இனிமேல் இப்படி பண்ணமாட்டா. போன் அவளோடது இல்லை என தெரிவிக்கிறார். ஆனால் பெத்தவங்க மாதிரியா பேசுறீங்க என சொல்லி கோபியிடம் சரமாரியாக திட்டுகிறார். இதனால் ஆடிப்போகும் கோபி இனிமேல் இப்படி பண்ணாம நான் பாத்துக்குறேன் என சொல்லி அங்கிருந்து செல்கிறார். வெளியே வரும் அவர் நீ எதுக்கும் கவலைப்படாத இனியா..நான் உன்ன நல்லா பாத்துப்பேன் என சொல்லிவிட்டு செல்கிறார். 

பாக்யாவுக்கு தெரிந்த உண்மை 

ஜெனி மற்றும் செல்வியுடன் பாக்யா பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு போன் வருகிறது. யாரென்று பார்க்கையில் இனியாவுடன் படிக்கும் மாணவியின் அம்மா என இருவரிடமும் சொல்லிவிட்டு பாக்யா பேச செல்கிறார். அந்த மாணவியின் அம்மாவோ நடந்தவற்றை எல்லாம் சொல்ல அதிர்ச்சியடையும் பாக்யா உடனடியாக பள்ளிக்கு சென்று டீச்சரை சந்திக்கிறார். பின்னர் இருவரும் முதல்வரை பார்க்கின்றனர். உங்க பொண்ணு ஸ்கூலுக்கு போன் கொண்டு வந்து வீடியோ பாத்துருக்கா என சொல்ல அவ போன் எடுத்துட்டு வரலையே மேடம் என பாக்யா சொல்கிறார். 

ஆனால் இல்ல அவ போன் வச்சிருந்தார். வீட்டுல இருந்து ஆளை கூப்பிட்டு வர சொன்னதுக்கு யாரும் வரலைன்னு மதியம் வரை வெளியே தான் இருந்தா. இப்பதான் ஒரு மணி நேரம் முன்னாடி அவங்க அப்பா வந்து பேசிட்டு போனாங்க என சொல்ல பாக்யாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
China Threatens: ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
Embed widget