Bhagyalakshmi Serial: கண்கலங்கிய எழில்...அதிர்ச்சியடைந்த பாக்யா..மீண்டும் முளைத்த புது பிரச்சனை..!
Bhagyalakshmi Serial Written Update Today (14.11.2022):பள்ளிக்கு போன் கொண்டு வந்த சம்பவத்தில் எப்படி வீட்டில் இருந்து ஆட்களை அழைத்து செல்லலாம் என இனியா முழிக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அம்ரிதா வீட்டில் நடந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படும் காட்சிகள் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கண்கலங்கிய எழில்
அம்ரிதா வீட்டில் நடந்த சம்பவங்களை நினைத்து எழில் வருத்தப்பட்டு கண் கலங்குகிறார். அப்போது அங்கு வரும் பாக்யா எழில் நிலையை கண்டு பதறிப்போய் என்ன நடந்தது என கேட்கிறார். உடனே எழில் அனைத்தையும் சொல்ல, அம்ரிதா வீட்டில் ஏன் திடீர்ன்னு அப்படி பேசுனாங்க என புரியாமல் பாக்யா முழிக்கிறார். மேலும் கொஞ்சம் பொறுமையாக இரு. உங்க 2 பேருக்கும் இப்போதைக்கு கல்யாணம் பண்ணப்போறது இல்ல. நீ கொஞ்ச நாளைக்கு அங்க போகாத என அறிவுரை வழங்குகிறார்.
சிக்கிய இனியா
பள்ளிக்கு போன் கொண்டு வந்த சம்பவத்தில் எப்படி வீட்டில் இருந்து ஆட்களை அழைத்து செல்லலாம் என இனியா முழிக்கிறார். உடனே பாக்யாவிடம் நான் இன்னிக்கு ஸ்கூலுக்கு போகல என சொல்ல ஏன் என அவர் கேட்கிறார். அதற்கு முதலில் தலைவலி என கூறும் இனியா, மீண்டும் அதட்டி கேட்கும் போது தொண்டைவலி என மாற்றி மாற்றி சொல்கிறார். இதனால் டென்ஷனாகும் பாக்யா எழிலுடன் இனியாவை ஸ்கூலுக்கு அனுப்புகிறார். பள்ளியில் சக மாணவிகள் வீட்டில் இருந்து பெற்றோர்களை அழைத்து வந்த நிலையில் இனியா மட்டும் கூப்பிட்டும் ஏன் வரவில்லை என தெரியல என ஆசிரியரிடம் பொய் தெரிவிக்கிறார். சாயங்காலத்துக்குள்ள வீட்டுல இருந்து ஆள் வரலைன்னா டீசி வாங்கிட்டு போயிரு என பள்ளியில் இருந்து தெரிவிக்க இனியா ஷாக்காகிறார்.
வர்ஷினி செய்யும் சூழ்ச்சி
ஜெனியின் அம்மா மரியம் அவரை காண வருகிறார். தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு வாரம் வைத்துக் கொள்கிறேன் என தெரிவிக்க குடும்பத்தினர் அனைவரும் வளைகாப்பு முடிந்ததும் கூப்பிட்டு போங்க என சொல்லி அனுப்புகிறார்கள். இதற்கிடையில் தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு அம்ரிதா வராத நிலையில் தனது நண்பர் சதீஷிடம் அதுகுறித்து தெரிவிக்கிறார்.
நண்பர் உடனே போன் போட்டு ஏன் வரல என கேட்க, இனிமேல் வருவனான்னு தெரியல என அம்ரிதா சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டிக்கிறார். எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் வர்ஷினி உங்களை நெருங்கி வர என்னை விட்டுட்டு விலகி போற அம்ரிதாவை தேடுறீங்க என எழிலிடம் சொல்ல, அவரோ இது என் பெர்சனல். இதுல தலையிடாதீங்க என கறாராக தெரிவித்து விட்டு வெளியே செல்கிறார். சதீஷ் உடனே போற போக்கை பார்த்தா இந்த படம் நடக்குமான்னே தெர்ல என சொல்ல, வர்ஷினி இந்த படமும் நல்லபடியா முடிஞ்சி நான் எழிலை கல்யாணம் பண்ணி காட்டுறேன் என சபதம் எடுப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.