Baakiyalakshmi Serial: கோபியை திருமணம் செய்ய மறுக்கும் ராதிகா... பாக்யலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்
பாக்யாவுக்கு மூர்த்தி ஆறுதல் சொல்லி, இனி கோபி எந்த விஷயத்திலும் தலையீடு இருக்க கூடாத மாதிரி நீ பண்ணணும் என நம்பிக்கையூட்டுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை திருமணம் செய்யும் யோசனையை ராதிகா மறுக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
பாக்யா எடுத்த அதிரடி முடிவு
நேற்றைய எபிசோடில் நீ ஒரு ஒட்டுண்ணி. யாரோட துணையில்லாமையும் நீ வாழ முடியாது என பாக்யாவை கோபி திட்ட ஆத்திரத்தில் அவர் போனை கட் செய்து விடுகிறார். பாக்யாவின் நிலையை பார்த்து ஜெனியும், செல்வியும் என்னவென்று விசாரிக்க தேவையில்லாத அழைப்பு. ஆனால் இதுதான் நம்ம வாழ்க்கையில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும். நாம இப்படியே சாப்பாடு, மசாலான்னு இல்லாம பிசினஸ் டெவலப் பண்ணனும். ஆனால் என்ன பண்ணணும்ன்னு தெரியல என பாக்யா சொல்ல செல்வி என்ன நீ இப்படி பேசுற அக்கா. என்ன பண்ணணும் தெரியாம நாம எப்படி பண்ண என கேட்கிறார்.
ஜெனியும் பாக்யா மேல நம்பிக்கை இருப்பதாகவும், தன்னுடைய முழு சப்போர்ட் உங்களுக்குத் தான் எனவும் தெரிவிக்கிறார். அப்போது அங்கு வரும் மூர்த்தியும், ஈஸ்வரியும் பாக்யாவிடம் இனியா ஸ்கூல் ஃபீஸ் கட்டியது குறித்து கேட்கிறார்கள். அவர் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அந்நேரம் வீட்டுக்கு வரும் இனியா கோபி பணம் கட்டியதாக தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரியும்,இனியாவும் கோபியை சுட்டிக் காட்டி பாக்யாவை மட்டம் தட்டி விட்டு செல்கின்றனர்.
இதனையடுத்து பாக்யாவுக்கு மூர்த்தி ஆறுதல் சொல்லி, இனி கோபி எந்த விஷயத்திலும் தலையீடு இருக்க கூடாத மாதிரி நீ பண்ணணும் என நம்பிக்கையூட்டுகிறார். பின்னர் எழிலின் அடுத்தப்பட கதையில் தயாரிப்பாளர் மாற்றம் சொல்லி அவர் எந்த முடிவும் எடுக்காததால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்படுகிறது. மாற்றம் செய்தால் படம் எடுக்க தயார். இல்லை என்றால் வேறு இடம் பார்க்குமாறு தயாரிப்பாளர் தெரிவிக்க எழில் அதிர்ச்சியடைகிறார். அவரது நண்பர் ஆறுதல் தெரிவித்து ஏதாவது செய் என அறிவுறுத்துகிறார்.
திருமணம் செய்ய மறுக்கும் ராதிகா
வீட்டுக்கு வரும் ராதிகா தனது அண்ணன் சந்துரு மற்றும் அம்மாவிடம் கோபியை சந்தித்ததாக கூறுகிறார். அவரின் இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் என குற்றவுணர்ச்சி ஏற்படுவதாக தெரிவிக்கிறார். உடனே சந்துரு ராதிகாவிடம், இந்த விஷயத்துல நீ பாதி தப்பு பண்ணிருக்க...கோபி பாதி தப்பு பண்ணிருக்காரு. அதனால ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்ல என கூறுகிறார். மேலும் நீ மும்பைக்கு போகாம தள்ளிப்போறதுலயும் ஒரு நல்லது இருக்கு. பேசாம நீ அவரையே கல்யாணம் பண்ணிக்கலாம் என சந்துரு தெரிவிக்க, ராதிகா கடுப்பாகி இந்த யோசனையை மறுப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.