அட.. ஆள் அடையாளமே தெரியலயே.. பாக்கியலட்சுமியில் ரீ என்ட்ரி தந்த கனா காணும் காலங்கள் ‘பச்சை’யப்பா!
பாக்கியலட்சுமி சீரியலில் லேட்டஸ்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளவரை ரசிகர்கள் நினைவுகூர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மிகவும் பிரபலமான தொடராக ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் இந்த தொடரில் புதிய ட்விஸ்ட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய என்ட்ரியாக உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளார் இறந்து போனதாக சொல்லப்பட்ட அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ்.
பாக்கியலட்சுமியில் நியூ என்ட்ரி :
கணேஷ் என்ட்ரிக்குப் பிறகு மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள் பாக்கியலட்சுமி சீரியலின் தீவிர ரசிகர்கள். இப்போ தான் எல்லா பிரச்னையும் ஒரு வழியா முடிவுக்கு வந்து அமிர்தாவும் எழிலும் சந்தோஷமாக அவர்களின் வாழ்க்கையைத் தொடங்கி உள்ளனர்.
இந்த சமயத்தில் எதற்காக இந்த ட்விஸ்ட்? அமிர்தாவுக்கும் எழிலுக்கும் திருமணம் நடந்த விஷயம் கணேஷூக்கு தெரிய வந்தால் புதிதாக என்னென்ன நடக்கும் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. இனி என்னவெல்லாம் அமிர்தாவின் வாழ்க்கையில் நடக்க போகிறதோ என மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். அது சரி என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடுகளில் பார்த்து கொள்ளலாம்.
யார் இந்த கணேஷ்?
கணேஷாக பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள இந்த முகம் மிகவும் பழக்கப்பட்ட பரிச்சயமான முகமாகத் தெரிகிறது என பலருக்கும் சந்தேகங்கள் இருந்தன. கொஞ்சம் உற்று நோக்கினால், அட... விஜய் டிவியின் எவர்க்ரீன் சீரியலான 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்த நம்ம பச்சை தான் இந்த கணேஷ் என்ற தகவல் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனா காணும் காலங்கள் பிரபலங்கள்:
பள்ளிப் பருவத்தின் இனிமையான நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்த 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான சீரியல் "கனா காணும் காலங்கள்". இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகையர் பலரும் வெள்ளித்திரையில் இன்று முக்கியமான திரை நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்.
அவர்களில் ஒரு சில சாதனையாளர்கள் தான் கவின், பிளாக் பாண்டி, கார்த்திக், ரியோ, இர்பான் மற்றும் பலர். அந்த வகையில் பச்சை என்ற கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய வாசுதேவ் கிரிஷ் மதுசூதனன் சீரியல் மற்றும் திரைப்படங்களில் முக்கியமான சில கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
'கனா காணும் காலங்கள்' தொடரில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒரு மாணவனாக பச்சையப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த வாசுதேவ் கிரிஷ் மதுசூதனன், மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடனத் திறமையை நிரூபித்தார். அதற்கு பிறகு மெல்ல திறந்தது கதவு, ஆபிஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கணேஷ் கொடுக்கப்போகும் ஷாக் :
தற்போது பாக்கியலட்சுமி தொடரில் சீரியல் தொடங்கியது முதல் இறந்து போனதாக சொல்லப்பட்ட அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ் கதாபாத்திரமாக சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் வாசுதேவ் கிரிஷ். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவரின் காட்சிகள் இடம் பெற்று இருந்தாலும் அதற்குள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டார். கணேஷ் என்ட்ரிக்கு பிறகு பாக்கியலட்சுமி தொடர் சூடு பிடித்துள்ளது.
யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்டுடன் உள்ளே நுழைந்துள்ளதால் அனைவரின் பார்வையும் கணேஷ் கதாபாத்திரத்தின் மீதும், அடுத்து அவரால் நிகழ போகும் பெரிய சிக்கல் குறித்தும் தான் உள்ளது. எனவே பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்க காத்திருக்கிறார் நம்ம கனா காணும் காலங்கள் பச்சை. வெயிட் அண்ட் வாட்ச்!