Baakiyalakshmi Serial: “யாராவது பாக்யாவோடு பேசுனீங்க அவ்வளவு தான்” -குடும்பத்தினரை மிரட்டிய கோபி... என்ன நடந்தது?
கோபி தனக்கு விவாகரத்து கிடைத்ததாக சொன்னதை நம்ப முடியவில்லை என ராதிகா கூற அவர்கள் மூவருக்குள்ளும் இதுதொடர்பாக கருத்துக்கள் எழுகின்றன.
பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து பெற்ற நிலையில் கோபி தன் குடும்பத்தினரை சந்திக்கும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்தியது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது, கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
கோபிக்கும் பாக்யாவுக்கும் விவாகரத்து கிடைத்திருக்குமோ என மகள் இனியா பயப்பட அவரை ஆறுதல் சொல்லி மூர்த்தி, ஈஸ்வரி, செழியன், ஜெனி ஆகியோர் ஆறுதல் சொல்லி தேற்றுகின்றனர்.அப்படி எல்லாம் நடந்திருக்காது என கூறுகின்றனர். ஜெனியோ நாம் அனைவரும் கோர்ட்டுக்கு சென்று பார்க்கலாம் என ஐடியா கூறுகிறார். மறுபுறம் பாக்யாவோ மகன் எழிலுடன் ஹோட்டலுக்கு சென்று தடபுடலாக ஆர்டர் செய்து சாப்பிட தயாராகிறார்.
அடுத்த சீனில் வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது கோபி வருகிறார். அவரிடம் பாக்யா எங்கே என அனைவரும் கேட்க, கோபி கோர்ட்டில் எந்தவித பதட்டமும் இல்லாமல் விவாகரத்து வாங்கி விட்டு பாக்யா சென்று விட்டதாக கூறுகிறார். இதனைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் கோபி பாக்யாவை பற்றி குடும்பத்தினர் ஆத்திரமடையும் வகையில் பல குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார். கடைசியாக எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு சொல்றேன். எனக்கு தெரியாம யாராவது பாக்யாவோடு உறவாட நினைச்சீங்க..அவ்வளவு தான் என சொல்லிவிட்டு செல்கிறார்.
இதனையடுத்து ராதிகா தனது அம்மா, அண்ணனோடு பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது. கோபி தனக்கு விவாகரத்து கிடைத்ததாக சொன்னதை நம்ப முடியவில்லை என ராதிகா கூற அவர்கள் மூவருக்குள்ளும் இதுதொடர்பாக கருத்துக்கள் எழுகின்றன. சந்தேகத்தை தீர்க்க வக்கீலுக்கு போன் செய்து பார்க்குமாறு அண்ணன் சந்துரு சொல்ல ராதிகா போன் செய்கிறார். வக்கீலோ ஆமா அவர்கள் இருவரும் பிரிஞ்சிட்டாங்க. பாக்யா எந்தவித பதட்டமும் இல்லாம கோர்ட்டுக்கு வந்து பேசி விவாகரத்து வாங்கிட்டு போய்ட்டாங்க என தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கோபியை ஏற்றுக் கொள்ள நல்ல முடிவு எடுக்குமாறு ராதிகாவிடம் இருவரும் தெரிவிக்கின்றனர். இதனால் ராதிகா மனது மாறுமா? ...இல்லை பாக்யா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் சீரியல் விறுவிறுப்பாகவே நகரவுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்