Baakiyalakshmi Serial: இண்டர்வியூ சென்ற இடத்தில் அவமானப்பட்ட பாக்யா...இன்றைய எபிசோடில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!
திருமண மண்டபத்தில் சமையல் காண்டிராக்டர் வேலைக்கு விண்ணப்பித்திருந்த பாக்யாவுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வருகிறது.
பாக்யலட்சுமி சீரியலில் பாக்யா வேலை ஒன்றிற்கு நேர்காணல் செல்லும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
இன்டர்வியூ செல்லும் பாக்யா
திருமண மண்டபத்தில் சமையல் காண்டிராக்டர் வேலைக்கு விண்ணப்பித்திருந்த பாக்யாவுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வருகிறது. அவர் மாமனார் மூர்த்தியிடம் ஆசீர்வாதமும், ஜெனி, செல்வியிடம் வாழ்த்தும் பெற்று எழிலுடன் அங்கு செல்கிறார். அங்கு சென்றதும் ரிசப்ஷனில் இருக்கும் பெண் பாக்யாவிடம் வந்தவர்களில் நீங்கள் மட்டும் தான் பெண் என சொல்ல அவர் பதட்டமடைகிறார். எழில் அவரை தேற்றி நேர்காணல் அறையின் உள்ளே அனுப்பி விடுகிறார்.
உள்ளே சென்றதும் ஊரில் உள்ள பெரிய பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் வந்திருக்க பாக்யா முதலில் எழிலிடமும் , பின் ஜெனியிடமும் போன் பண்ணி பேசுகிறார். பயோடேட்டா இல்லாமல் வந்திருந்த பாக்யாவை எல்லோர் முன்னாடியும் நேர்காணல் நடத்துபவர் அவமானப்படுத்துகிறார். முதலில் அங்கு வந்தவர்களும் பாக்யாவை ஏளனமாக பேசினாலும் சரி வந்தது வந்துட்டீங்க. என்ன நடக்குதுன்னு பாருங்க. உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும் என தெரிவிக்கிறார்கள்.
பாக்யாவுக்கு நடந்த ட்விஸ்ட்
மண்டபத்தின் ஓனர் வந்து நேர்காணலுக்கு எல்லாரும் வந்தாச்சா என கேட்க, அவரது உதவியாளர் பாக்யாவை குறிப்பிட்டு பயோடேட்டா கூட கொண்டு வராமல் ஒருவர் வந்துள்ளதாக தெரிவிக்கிறார். பின் வந்த அனைவரையும் சாப்பாடு செய்ய சொல்லி அதன் பிறகே தேர்வு செய்யப் போவதாக கூறுகிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் உதவியாளர், வந்திருக்கிறவர்களில் சிலர் கேட்டரிங் தொழிலை நடத்திதான் வருகிறார்கள். சமைக்கும் வேலையை செய்வார்களா என சந்தேகிக்கிறார். ஆனால் சமைத்து காட்டாமல் தேர்வு செய்யப்போவதில்லை என தனது முடிவில் கறாராக இருக்கிறார் அந்த மண்டப ஓனர்.
உதவியாளர் வந்து நேர்காணலுக்கு வந்திருந்தவர்களிடம் சமையல் டாஸ்க் பற்றி சொல்கிறார். இதனால் பாக்யாவை தவிர மற்ற எல்லோரும் என்ன செய்வதென்று குழம்புகிறார்கள். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.