Baakiyalakshmi Sep 7 Episode : ஷாக் கொடுத்த அமிர்தாவின் முதல் கணவர்... பாக்கியலஷ்மி எபிசோட் இன்று
Baakiyalakshmi Sep 7 episode : செத்துப் போனதாக நினைத்த அமிர்தாவின் முதல் கணவர் கணேஷ் நினைவு நாள் அன்று திரும்பி வந்து அனைவருக்கு ஷாக் கொடுக்கிறான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் இனியா பேசி கொண்டு இருக்கிறாள். "எப்படி இதை எல்லாம் சமாளிச்ச உனக்கு பயமா இல்லையா அம்மா" என இனியா கேட்கிறாள். "எனக்கும் பயமா தான் இருந்தது ஆனால் அதை விட உன்னோட அசைன்மென்ட் முக்கியமா தோணிச்சு. உங்க அப்பா என்னால எதுவுமே செய்ய முடியாது என சொல்லி சொல்லியே எல்லாத்தையும் என்னை செய்ய வைத்துவிட்டார்" என்கிறாள் பாக்கியா. "நடுரோட்ல வண்டி நின்றது, ரூம் கிடைக்காம திண்டாடியது, ரூமுக்கு போலீஸ் வந்தது என எல்லாமே பயமா தான் இருந்தது. ஆனால் எப்படியோ இதை முடிக்கணும் என நினைச்சேன்" என பாக்கியா சொன்னதும் இனியா அம்மாவை கட்டிக்கொள்கிறாள்.
பாக்கியா போய் நல்ல சாப்பாடு கிடைக்கிற இடத்தை கேட்டு தெரிந்துகொண்டு வருகிறாள். ஈஸ்வரியை சாப்பிட அழைக்கிறாள். பக்கத்தில் ஒரு காடு இருப்பதாகவும், அங்கே சென்றால் இனியா அசைன்மென்ட் செய்ய ரொம்ப உதவியா இருக்கும் என பேசிக்கொள்கிறார்கள். ஈஸ்வரி நானும் உங்களுடன் வருகிறேன் என சொல்லி கிளம்புகிறார்கள்.
பாக்கியா ராமமூர்த்திக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறாள். பாக்கியா செழியனை பற்றி விசாரிக்கிறான். "செழியனை பார்க்கவே முடியல. அவன் ஜெனி வீட்டிலேயே இருக்கிறான் போல" என்கிறார் ராமமூர்த்தி. அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் பாக்கியா. மறுபக்கம் கணேஷ் நினைவு நாளுக்கு படையல் போடுவதற்காக அனைத்தையும் அழுது கொண்டே செய்கிறார் கணேஷின் அம்மா. அமிர்தாவும் வீட்டிலில் பொங்கல் வடை பாயசம் என விருந்து படைக்க அதை பார்த்து ராமமூர்த்தி என்ன விசேஷம் என கேட்கிறார். எழில் கணேஷின் நினைவு நாள் குறித்து ராமமூர்த்தியிடம் சொல்கிறான். "நீ உங்க வீட்டில என்னென்ன செய்வியோ அதையே செய். எதையும் மாத்திக்க வேண்டாம்" என அமிர்தாவிடம் சொல்கிறான் எழில். ராமமூர்த்தி அமிர்தாவிடம் "எழில் உன்னையும் நிலாவையும் நல்ல பாத்துக்குவான். நீ கவலை படாத" என்கிறார்.
அழுது கொண்டே கணேஷ் போட்டோவுக்கு மாலை படையல் போட்டு கொண்டு இருக்கும் போது யாரோ கதவை தட்டுகிறார்கள். திறந்து பார்த்ததும் அங்கே கணேஷ் நிற்பதை பார்த்து அவனின் அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். இறந்து போனதாக நினைத்த மகன் உயிருடன் வந்து நிற்பதை பார்த்ததும் அவர்களால் நம்ப முடியவில்லை. "நான் தான் உங்க மகன் கணேஷ் வந்து இருக்கேன். நீங்க இனிமே கவலை படாதீங்க. நான் உங்களை பார்த்து கொள்கிறேன்" என கணேஷ் சொல்கிறான்.