Baakiyalakshmi August 1: இனியாவை பிரைன் வாஷ் செய்யும் கோபி... காலேஜ் செல்லத் தயாராகும் பாக்கியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!
* பாக்கியா காலேஜ் சேர்ந்துள்ள விஷயத்தை இனியா மூலம் தெரிந்து கொண்ட கோபி அதிர்ச்சி அடைகிறார். * கோபி சொன்ன இந்த விஷயத்தை கேட்டு ஷாக்காகிறாள் ராதிகா இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டில் அனைவரும் ஒன்றாக சாப்பிடுகிறார்கள். கோபி வேறு ஏதோ சிந்தனையில் இருக்கிறார். மயூ சொல்வதைக் கூட காதில் வாங்காமல் யோசித்துக் கொண்டே இருக்கிறார். "என்ன ஆச்சு கோபி?" என ராதிகா கேட்க "என்னோட ப்ரெண்ட் அப்ராட்ல இருந்து கால் பண்ணான். இனியாவ அப்ராட்ல படிக்க வைக்க வேண்டியது தானே எனக் கேட்கிறான். எல்லாருமா சேர்ந்து என்னோட குழந்தையோட லைஃப் ஸ்பாயில் பண்றாங்க" என்கிறார்.
ராதிகா உடனே "இனியாவுக்கு பிடித்த கோர்ஸ்ல தானே சேர்த்து விட்டு இருக்காங்க. அவளை யாரும் கம்பெல் பண்ணலையே. பாக்கியா இனியாவோட அம்மா. எப்படி பொண்ணோட லைஃப் ஸ்பாயில் பண்ணுவாங்க" என பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். மறுபடியும் கோபிக்கு போன் வரவே உள்ளே செல்கிறார். ராதிகாவை அவளுடைய அம்மா பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்து பேசியதால் திட்டுகிறாள்.
கொட்டும் மழையில் இனியாவை பார்ப்பதற்காக குடைபிடித்து படி பாக்கியா வீட்டு வாசலில் நிற்கிறார் கோபி. இனியாவை வெளியில் வரச்சொல்லி "நாளைக்கு காலேஜ் போகப்போறத நினைச்சா ஒரே எக்சைட்மென்ட்டா இருக்கா? தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டியா?" என கேட்கிறார் கோபி.
"இல்ல டாடி இனிமேல் தான் வாங்கணும்" என இனியா சொல்ல "சரி, நாளைக்கு டாடி உன்னை மால் கூட்டிட்டு போறேன். அங்க உனக்கு என்ன எல்லாம் வேணும் எல்லாத்தையும் வாங்கிக்கோ" என்கிறார். "இல்ல நான் அம்மா கூட போய் வாங்கிக்குறேன்" என இனியா சொல்ல இல்ல நம்ம ரெண்டு பேரும் போய் வாங்கலாம் என்கிறார் கோபி.
பிறகு கோபி, பாக்கியா எங்க என கிண்டலாக விசாரிக்க இனியா, பாக்கியா காலேஜில் சேர்ந்ததைப் பற்றி கோபியிடம் சொல்ல, அவர் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறார். "என்னோட காலேஜில், ஈவினிங் காலேஜ் சேர்ந்து இருக்காங்க. வீட்ல எல்லாருக்கும் ஓகே தான்" என்கிறாள் இனியா. "இந்த வயசுல இந்த இடியட்டுக்கு இது எல்லாம் தேவையா? நீ அவமான படுவதற்காகவே இப்படி செய்யுறா. இதை நான் ஏதாவது செய்து தடுக்கிறேன். நாளைக்கு நாம இரண்டு பேரும் மாலுக்கு போகலாம்” என சொல்லிவிட்டு கிளம்புகிறார் கோபி.
பாக்கியா காலேஜ் போவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக லிஸ்ட் ஒன்றை எழுதிக் கொண்டு இருக்கிறாள். அப்போது “நான் ஒன்னு வாங்கி வைச்சு இருக்கேன்” என பென்சில் பாக்ஸை காண்பிக்க அனைவரும் சிரிக்கிறார்கள். "இது எல்லாம் அந்தக் காலம், இப்போ யாரும் இதை யூஸ் பண்ண மாட்டாங்க ஆன்ட்டி" என்று ஜெனி சொல்கிறாள். பிறகு பாக்கியா தன்னுடைய ஆசை ஒவ்வொன்றாக சொல்ல கடுப்பான இனியா, நீ பேசுறத கேட்டா காலேஜ் போற ஆசையே எனக்கு போய்விடும் என அங்கிருந்து சென்று விடுகிறாள்.
கோபி ராதிகாவிடம், பாக்கியா காலேஜ் போகப்போற விஷயம் பற்றி சொல்கிறார். அதைக் கேட்டதும் ராதிகா ஷாக்காகிறாள். "இவங்களுக்கு ஹவுஸ் வைப்பா இருக்கவே தெரியாதா? எதுக்காக இப்படி செய்யறாங்க? கேட்டரிங் செய்யறாங்க, ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போறாங்க இப்போ காலேஜ் போகப் போறாங்களா? இரண்டே நாள்ல பிச்சுக்கிட்டு ஓடிவர போறாங்க" என சொல்லி விட்டு சென்று விடுகிறாள் ராதிகா.
கோபியும் ஆமா இரண்டே நாள்ல அவமானப்பட்டு திரும்பி தான் வரப்போகிறாள் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.