Anna Serial: பஞ்சாயத்திக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முத்துப்பாண்டி, ஷண்முகம் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்று!
பஞ்சாயத்து கூட, பாக்கியம் இசக்கியை தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கச் சொல்ல, ஷண்முகம் முடியாது என்று மறுக்கிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர் பெரியவர்கள் வந்து சௌந்தரபாண்டி பஞ்சாயத்தைக் கூட்ட சொல்லி இருப்பதாக சொல்ல, ஷண்முகம் வர முடியாது என்று மறுக்க, பரணி “நீங்க ஏற்பாடு பண்ணுங்க” என்று சொல்லி அனுப்பிய நிலையில். இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஊர் பெரியவர்கள் அடுத்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து ஷண்முகம் பஞ்சாயத்துக்கு வருவதாக சொல்லி விட்டதாகக் கூறுகின்றனர். “முதலில் வர மாட்டேன்னு தான் சொன்னா. பரணி பாப்பா கூட்டி வருவதாக சொல்லி இருக்கு” என்று சொல்ல இவர்கள் சந்தோசப்படுகின்றனர்.
அடுத்து சௌந்தரபாண்டி பாக்கியத்தைக் கூப்பிட்டு “நீ தான் பேசணும், பேசி இந்த வீட்டிற்கு கூட்டி வரணும்” என்று மைண்ட் வாய்ஸ் செய்ய, அவளும் ஒப்பு கொள்கிறாள். அதோடு முத்துப்பாண்டியிடம் பஞ்சாயத்தில் எல்லாரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி வைக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து கூட, பாக்கியம் இசக்கியை தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கச் சொல்ல, ஷண்முகம் முடியாது என்று மறுக்கிறான். முத்துப்பாண்டி “ஊர் பெரிய மனுஷங்க காலில் விழுந்து தப்பு பண்ணிட்டேன் தான், என்னை மன்னிச்சிடுங்க, இசக்கியை நான் நல்லபடியா வச்சி வாழுறேன்” என்று சொல்கிறான்.
ஊர் பெரியவர்கள் “ஒரு பொண்ணுங்க ஒரு முறை தான் கல்யாணம் நடக்கும், அது இசக்கிக்கு நடந்து போச்சு. அவனும் தப்பை உணர்ந்து நல்லா வச்சி பார்த்துக்கறதா சொல்றான், அனுப்பி வை பா” என்று சொல்ல, ஷண்முகம் அப்போதும் மறுப்பு தெரிவிக்க, ஊர் பெரியவர்கள் இசக்கி முடிவை கேட்க, ஷண்முகம் “அவ என்ன சொல்லணும், நான் சொன்னது தான் அவளோட முடிவு” என்று சொல்ல, இசக்கி வாயால் சொல்லட்டும் என்று கூறுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.