Amudhavum Annalakshmiyum: திருடுபோன பணத்திற்காக அமுதா செய்த வேலை... எதிர்பாராத திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்!
அமுதாவை காணாத செந்தில் எங்கே என மாணிக்கத்திடம் கேட்க, அவரும் தனக்கு தெரியாது என மழுப்புகிறார். இதனை கேட்காத செந்தில் அமுதாவுக்கு போன் செய்கிறார்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் பணத்தை தொலைத்த நிலையில் அமுதா மீண்டும் அதனை கஷ்டப்பட்டு உழைத்து பெறும் காட்சிகள் இடம் பெறுகிறது.
விறுவிறுப்பாக செல்லும் சீரியல்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி, பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.
முன்னதாக சைக்கிள் போட்டியில் அமுதா வெற்றி பெற்ற நிலையில் அதனைக் கொண்டு செந்திலை காலேஜ் படிப்பதற்கு ஏற்றவாறு அழகாக மாற்றுகிறார். பின்னர் கடைத்தெருவுக்கு சென்ற அமுதாவிடம் இருந்த பணம் திருடப்படுகிறது. இதனை வீட்டில் சொல்லாமல் இருக்கும் அமுதா அந்நேரம் பார்க்க செங்கள் சூளையில் கிடைக்கும் வேலையை பார்த்து பணத்தை பெற முடிவு செய்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில் இன்றைய எபிசோடில் அமுதா மாணிக்கத்திற்கு போன் செய்து பணத்தை தவற விட்ட தகவலை சொல்ல அவர் பதறுகிறார். உடனே சித்தப்பா கவலைப்படாதீங்க. காலையில பணத்துடன் வந்து விடுவதாகவும், செந்தில் கிட்ட இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம், அவரை ஒழுங்காக படிக்க சொல்லுங்க எனவும் கூறுகிறாள். இதனையடுத்து இரவு வீட்டிற்கு வராமல் அமுதா எங்க போனா என சின்னா, பரமு பிரச்சனை செய்ய தொடங்குகிறார்கள்.
அன்னலட்சுமி அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். அப்போது அமுதாவை காணாத செந்தில் எங்கே என மாணிக்கத்திடம் கேட்க, அவரும் தனக்கு தெரியாது என மழுப்புகிறார். இதனை கேட்காத செந்தில் அமுதாவுக்கு போன் செய்கிறார். போனில் அமுதா, நீங்க பரீட்சைக்கு படிக்கிற வேலையை மட்டும் பாருங்க. என்னை பத்தி கவலைப்பட வேண்டாம் என கூறுகிறார்.
மேலும் தான் பாதுகாப்பா தான் இருக்கேன் என சொல்லிவிட்டு, அன்னத்திற்கு போன் செய்து காலையில் வருவதாக சொல்கிறார். பின்னர் செங்கல் சூளையில் அமுதா விடிய விடிய வேலை செய்கிறாள். வேலை முடிந்ததும் அமுதாவிற்கு ஓனர் காலையில் பணம் கொடுக்கிறார்.பணத்துடன் வீட்டுக்கு வரும் அமுதா, அன்னலட்சுமியிடம் ஒரு நல்ல காரியத்திற்காக செல்கிறேன்.கடவுளிடம் வேண்டிக் கொள்ளுமாறு சொல்ல அன்னலட்சுமியும் வேண்டும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு இடம் பெறுகிறது.