Amudhavum Annalakshmiyum: மாயாவைக் கொன்ற பழனி.. கைதாகும் அன்னம்.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்று!
பழனி போலீசிடம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் “நான் கொலை செய்தது ரிப்போர்ட்டில் வரக் கூடாது அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் சரி என சொல்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும் (Amudhavum Annalakshmiyum). கடந்த வாரம் கல்யாண மண்டபத்தில் நடந்த பிரச்சனைகளால் அன்னலட்சுமியை போலீஸ் அரெஸ்ட் செய்த நிலையில், வரும் நாள்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது அமுதா, செந்தில், மாணிக்கம் அழுதபடி பின்னால் ஓட, பழனியிடம் குமரேசன் “சரியான ஆப்புடா அந்த குடும்பத்துக்கு” என சொல்ல, மாயாவை கொன்னதே நான் தான் என்கிற உண்மையை உடைக்கிறான் பழனி. இதனைத் தொடர்ந்து அமுதா வக்கீலை பார்த்து கேஸ் பற்றிய விவரங்களை சொல்கிறாள்.
பஞ்சாயத்து தலைவர் அமுதா வீட்டுக்கு வந்து “உங்க குடும்பத்தால் இந்த ஊருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டதால், உங்களை ஊரை விட்டு விலக்கி வைக்கிறோம், உடனடியாக ஊரை காலி செய்து விட்டு செல்லுங்கள்” எனக் கூறுகின்றனர். அமுதா, மாணிக்கம் செந்தில் மூவரையும் சார்லஸ் தனது வீட்டிற்கு அழைத்து வருகிறான்.
பழனி போலீசிடம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் “நான் கொலை செய்தது ரிப்போர்ட்டில் வரக் கூடாது அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் சரி என சொல்கிறார். இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிடளிடம் அன்னலட்சுமி தான் மாயாவை இருபுறமும் கத்தியால் குத்தியதாக வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கச் சொல்கிறார். அன்னலட்சுமி படித்து பார்க்காமல் கையெழுத்து போட்டு விடுகிறாள்.
அதைத் தொடர்ந்து அமுதா கோயிலுக்குச் சென்று சித்தர் ஒருவரிடம் நல்வாக்கு கேக்க, அவர் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என சொல்லி, விடியும் போது உண்மை வெளிவரும் என சொல்ல, அமுதா தூங்கி கொண்டிருந்தவள் படாரென எழுந்திருக்க, அது கனவு என தெரிய வருகிறது. மாணிக்கத்திடம் கனவில் கண்டவற்றை சொல்கிறாள். மறுநாள் காலை மாணிக்கம் பேப்பரில் அக்கா கொலை செய்த செய்தி வந்திருப்பதாக காட்ட அமுதா ஷாக் ஆகிறாள்.
அதன் பிறகு அமுதா ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் பேப்பரில் அன்னலட்சுமி மாயாவை வயிற்றில் குத்தியதாக வந்திருக்கிறது, ஆனால் அவங்க முதுகில் குத்தியதாக தன்னிடம் சொன்னதாக சொல்ல, இன்ஸ்பெக்டர் அவளைத் திட்டி “எதுவானாலும் கோர்ட்டுல பார்த்துக்கோ” என சொல்லிவிட்டு நகர்ந்தபடி பழனியிடம் போன் செய்து அமுதாவை ரெண்டு மணி நேரத்திற்கு கோர்ட்டுக்கு வராமல் தடுக்கும்படி சொல்கிறாள்.
கான்ஸ்டபிள் அமுதாவிடம் இன்ஸ்பெக்டர் ஸ்டேட்மெண்டில் கையெழுத்து வாங்கிய உண்மையை சொல்லி உடனே சென்று வக்கீலிடம் சொல்லுமாறு சொல்ல அமுதா, செந்தில் இருவரும் பைக்கில் வர பழனி ஆட்கள் வம்பிழுத்து செந்திலை கட்டையால் மண்டையில் அடித்து விடுகின்றனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து இருவரும் ஆட்டோவில் கோர்ட்டுக்கு கிளம்ப, கோர்ட்டில் அன்னலட்சுமியை விசாரித்துக் கொண்டிருகின்றனர்.
கோர்ட்டில் அன்னலட்சுமி குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ரிமாண்டில் வைக்க சொல்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.