Amudhavum Annalakshmiyum July 24: ஸ்கூலுக்கு வந்த அமுதா.. உமாவுக்கு ஏமாற்றம்...அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்!
அமுதா வெளியே வர மற்ற மாணவர்கள் அமுதாவிடம் “உங்களை நாங்க வேணா அக்கான்னு கூப்பிடவா” என நக்கலடிக்க அமுதா புரியாமல் பார்க்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலின் கடந்த வார வெள்ளிக்கிழமை எபிசோடில் பாட்டி வேதநாயகி வைத்த போட்டிகளில் அமுதா ஜெயித்து ஸ்கூலுக்கு படிக்கக் கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஸ்கூலுக்கு மாணிக்கம் யூனிபார்மில் வந்து நானும் படிச்சி கலெக்டர் ஆகலாம்னு நினைக்கிறேன் என செந்திலிடம் சொல்கிறார். அதோடு அவர் உமாவுக்கு வணக்கம் சொல்லி விட்டு “நீ அவ வருவான்னு எதிர்பார்த்து காத்திக்கிட்டிருக்க மாதிரி தெரியுது.. அவ இங்க வரலை, வேற ஸ்கூல்ல்ல சேர்ந்து இந்நேரம் படிக்க ஆரம்பிச்சிருப்பா” என சொல்லி ஸ்வீட் கொடுக்கிறார்.
அடுத்ததாக செந்தில் மாணிக்கத்திடம் அமுதா இங்க வரலேன்னா எங்க போயிருக்கா என கேக்க, மாணிக்கம் சொல்ல மாட்டேன் என சொல்லி விடுகிறார். மறுபக்கம் அமுதா யூனிபார்முடன் பள்ளிக்கு சந்தோஷமாக வரும் போது மனதில் தனது பள்ளி பருவத்தை நினைத்துப் பார்க்கிறாள். அங்கிருக்கும் பிள்ளையாரை பார்த்துவேண்டி விட்டு வகுப்பிற்கு வர மற்றவர்கள் அவளை கேலி செய்கின்றனர்.
இதனையடுத்து அமுதா தனியாக அமர்ந்திருக்க, கரஸ்பாண்டண்ட் மகன் அவளை ஜன்னல் வழியாக முறைத்து பார்க்கிறார். அடுத்ததாக பள்ளியின் கரஸ்பாண்டண்டும் அவரது மகனும் அறிமுகமாக கரஸ் மகன் கரசிடம் “நம்ம ஸ்கூல்ல புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கா அவ யாருன்னு தெரியுதா என கேட்க நாம பொண்ணு கேக்க போய் முடியாதுன்னு அவ அப்பா சொன்னாரே ஞாபகம் இருக்கா” என கேக்க, “அதை எப்படிடா மறக்க முடியும்” என சொல்கிறார்.
“நீ பாடம் எடுக்குற வகுப்புல உனக்கு பிடிச்ச பொண்ணு இதை விட நல்ல வாய்ப்பு வேற யாருக்கு வரும்? அவளை வெளில வச்சு எதுவும் பண்ணாத.. உன்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னவளை படிக்க விடாம பண்ணு” என்று சொல்கிறார்.
இதனையடுத்து கரசின் மகன் பாலா அமுதா வகுப்பிற்கு பாடம் எடுக்க வருகிறார். “புதுசா இந்த கிளாசுல சேர்ந்த பொண்ணு யாரு?” என கேட்க அமுதா எழுந்து நிற்க, “உனக்கு தான் கல்யாண வயசு ஆயிடுச்சுல்ல ஒழுங்கா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த வேண்டியது தான” எனக் கேட்க, அமுதா அவனிடம் “படிச்சே ஆக வேண்டிய கட்டாயம்” என்று விளக்கம் சொல்ல பாலா அவளிடம் “ஒழுங்கா படிக்கலை டிசி கிழிச்சி கைல குடுத்துருவேன்” என மிரட்டுகிறான்.
அதன் பிறகு அமுதா வெளியே வர மற்ற மாணவர்கள் அமுதாவிடம் “உங்களை நாங்க வேணா அக்கான்னு கூப்பிடவா” என நக்கலடிக்க அமுதா புரியாமல் பார்க்கிறாள். பள்ளி முடிந்து அமுதா வீட்டிற்கு வர செந்தில் நீ எந்த ஸ்கூல்ல படிக்கிற என கேக்க, அமுதா சொல்ல முடியாது என்று பதில் சொல்கிறாள். “பொண்டாட்டி எந்த ஸ்கூல்ல படிக்கிறான்னு புருஷனுக்கு தெரிய வேண்டாமா” என கேக்க, “இப்ப தான் நான் உங்க பொண்டாட்டின்னு தெரிஞ்சுதா? நான் படிச்சி முடிக்கிற வரைக்கும் எனக்கு யாரோட உதவியும் வேண்டாம்” என பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.