Simbu: சிம்புவை திருமணம் பண்ணனும்... ஆசையாய் சொன்ன நடிகை! பதிலடி கொடுத்த டி.ராஜேந்தர்!
நடிகர் சிம்புவை திருமணம் செய்வதற்கு ஆசையாக இருக்கிறது என்று அவருடைய தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையிலேயே தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ்.

Simbu: நடிகர் சிம்புவை திருமணம் செய்வதற்கு ஆசையாக இருக்கிறது என்று அவருடைய தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையிலேயே தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ்.
திருமணம் செய்யாமல் இருக்கும் சிம்பு:
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். இடையில் கொஞ்சம் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட இவர் தீவிர உடற்பயிற்சியின் மூலம் மொத்தமாக தன்னை மாற்றி மாஸ் எண்ட்ரி கொடுத்தார். இதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் அடுத்தடுத்து இவரது நடிப்பில் வெளியான பத்து தல மற்றும் தக் லைப் ஆகிய படங்கள் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது அவர் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு புறம் சிம்பு நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். அதே நேரம் பல்வேறு நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கினாலும் 42 வயதாகியும் சிம்பு இன்னும் திருமணம் செய்யமால் இருக்கிறார். இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் சிம்புவின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.
சிம்புவை திருமணம் செய்ய ஆசை:
இந்த நிலையில் தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றி நடைபெறும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கண்ட சீரியல் நடிகை சாந்தினி நடிகர் சிம்புவை திருமணம் செய்ய எனக்கு ஆசையாக இருக்கிறது என்று தனது விருப்பத்தை டி.ராஜேந்தர் முன்னிலையிலேயே தெரிவித்துள்ளார். நடிகை சாந்தினி பல்வேறு தனியார் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
கலங்கிய டி.ராஜேந்தர்:
இச்சூழலில் தான் அவர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு டி.ராஜேந்தர் உடனே உருக்கமாக பதிலளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, “காதல் மனைவி மீது மட்டும் வைத்திருப்பது இல்லை. மகன்கள் மீதும் மகள்கள் மீதும் வைத்திருப்பதும் ஒருவித காதல் தான். அப்படித்தான் என்னுடைய மகன் சிம்புவின் மீதும் நான் வைத்திருக்கிறேன். நானும் என் மனைவியும் எந்தப் பெண்ணைக் காட்டுகிறோமோ, அதை வேண்டாம் என்று சொல்லாமல் சிம்பு உடனே திருமணம் செய்து கொள்வார். ஆனால் அப்படிப்பட்ட திருமணம் அவருக்கு இருக்கக் கூடாது.
அவரைத் தேடி, சிம்புதான் வேண்டும் என மனப்பூர்வமாக எந்தப் பெண் வருகிறாரோ அவள்தான் சிம்புவுக்கு மனைவியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றும், “என் மகனைத் தொந்தரவு செய்ய மாட்டேன். இப்படித்தான் மற்ற பெற்றோர்களும் இருக்க வேண்டும். பெற்றோர்களின் விருப்பத்திற்காகத் திருமணம் செய்து, அந்தத் திருமணம் கடைசியில் எப்படி ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால், என் மகனைத் தேடி, இவர்தான் வேண்டும் என எந்தப் பெண் வருகிறாளோ, அவள்தான் சிம்புவுக்கு மனைவியாக வேண்டும்”என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகன் குறித்து இவ்வளவு உணர்வுப்பூர்வமாக அவரது தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார் என்று சிம்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






















