Rachitha Mahalakshmi: ‘எல்லாத்தையும் உள்ளே வச்சிருக்க காரணம் இருக்கு’ .. ரச்சிதா வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
தன் கணவர் பற்றி போலீசில் பரபரப்பு புகார் அளித்த சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
தன் கணவர் பற்றி போலீசில் பரபரப்பு புகார் அளித்த சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த ரச்சிதா மகாலட்சுமி
பெங்களூரில் பிறந்த ரச்சிதா மகாலட்சுமி, விஜய் டிவியில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார்.
இதில் சரவணன் மீனாட்சி சீரியல் அவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரச்சிதா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் அவரை சுற்றி சுற்றி வந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
காதல் திருமணம் - பிரிவு
இதனிடையே தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இணைந்து நடித்த தினேஷை காதலித்து ரச்சிதா திருமணம் செய்து கொண்டார். ஐயப்பந்தாங்கல் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர். இதன்பின்னரே ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரின் பங்களிப்பு குறித்து தினேஷ் கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் சில தினங்களுக்கு நடந்த சம்பவங்கள் அதனை கேள்விக்குறியாக்கியது. இருவரும் இனிமேல் இணைய வாய்ப்பில்லை என்னும் அளவுக்கு போலீசில் ரச்சிதா புகார் ஒன்றை அளித்தார்.
தினேஷ் மீது போலீசில் புகார்
அதில், தினேஷ் தன்னை ஆபாசமாக பேசி, மெசேஜ் அனுப்பி வருகிறார். என்னை மிரட்டுகிறார். ஆகவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். போலீசாரும் தினேஷை அழைத்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தன்னை எந்த விஷயமும் காயப்படுத்துவதில்லை என தினேஷ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை ரச்சிதா பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ‘நான் எல்லாவற்றையும் உள்ளே வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.... வருத்தம் இல்லை, கற்றுக்கொண்ட பாடங்கள் மட்டுமே’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் ரச்சிதா தினேஷை குறிப்பிட்டு தான் இதனை தெரிவித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.