![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cook with Comali 4: குக் வித் கோமாளியில் இருந்து விடைபெறும் முக்கிய பிரபலம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகுவதாக சோசியல் மீடியாவில் பரவி வரும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
![Cook with Comali 4: குக் வித் கோமாளியில் இருந்து விடைபெறும் முக்கிய பிரபலம்... அதிர்ச்சியில் ரசிகர்கள் A Rumor is spreading all around in social media that Venkatesh bhat will no more be a part of Cook with Comali as he quits the show Cook with Comali 4: குக் வித் கோமாளியில் இருந்து விடைபெறும் முக்கிய பிரபலம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/26/107058a813bf09c50b5929e095991c651687775864810224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ மட்டுமே பார்க்க ஏராளமான ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ளனர். ரசிகர்கள் விரும்பும் வகையில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவியை அடித்து கொள்ள ஆளே இல்லை. அப்படி கடந்த மூன்று சீசன்களாக மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 10 போட்டியாளர்களுடன் துவங்கியது. ஷெரின், விசித்ரா, மைம் கோபி, விஜே விஷால், காளையன்,ஆண்ட்ரியன், சிருஷ்டி டாங்கே, சிவாங்கி கிருஷ்ணகுமார், ராஜா ஐயப்பா, கிஷோர் என பத்து போட்டியாளர்களுடன் ரவீனா, மோனிஷா, ஜி.பி.முத்து, சில்மிஷ சிவா, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன் போன்ற கோமாளிகள் புதிதாக என்ட்ரி கொடுத்தனர். அவர்களுடன் சேர்ந்து வழக்கமான ஸ்டார் கோமாளிகளான சுனிதா, புகழ், தங்கதுரை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். வைல்ட் கார்டு போட்டியாளர்களாக கிரண் மற்றும் கஜேஷ் கலந்து கொண்டனர்.
கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த நான்காவது சீசனையும் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் நடுவர்களாகவும் தொகுப்பாளராக ரக்ஷனும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். உலகளவில் ஏராளமான ரசிகர்களை பெற்ற இந்த நிகழ்ச்சி பலருக்கும் கவலை டென்ஷனை மறக்கடிக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள் முடங்கி இருந்த மக்களுக்கு நல்ல ஒரு என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றால் அது மிகையல்ல.
இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த சீசனில் 'டிக்கெட் டு பினாலே' போட்டி நேற்று நடைபெற்றது. அதில் நடிகை விசித்ரா டைரக்ட் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டு விட்டார். சிவாங்கி கிருஷ்ணகுமார், சிருஷ்டி டாங்கே, மைம் கோபி, கிரண் உள்ளிட்டோர் டாப் 5 போட்டியாளர்களாக உள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலம் ஒருவர் விலகிவிட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த மூன்று சீசன் மற்றுமின்றி இந்த சீசனிலும் நடுவர்களில் ஒருவராக இருந்து வரும் செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக செஃப் வெங்கடேஷ் பட் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தார். இதனால் அவர் அங்கேயே செட்டிலாகி விட்டார் என்றும் இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார் என்றும் கருத்துதெரிவித்து வருகிறார்கள். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்கள் அவர் பாதியில் எப்படி நிகழ்ச்சியை விட்டு போக முடியுமென ஒரு சிலரும் இல்லை அவர் மீண்டும் தொடர்வார் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)