மேலும் அறிய

Tamilarasan OTT Release: விஜய் ஆண்டனியின் ’தமிழரசன்’... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆர்டி ராஜசேகர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

கோலிவுட்டின் சமீபத்திய ஆக்‌ஷன் த்ரில்லர் படமான தமிழரசன் திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள ’தமிழரசன்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி மற்றும் சோனு சூட் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.என்.எஸ் புரொடெக்ஷன் நிறுவனத்தின் கீழ் எஸ். கௌசல்யா ராணி தயாரித்துள்ள தமிழரசன் திரைப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூட் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
படத்தின் முன்னணி கதாநாயகன் தமிழரசன் (விஜய் ஆண்டனி) இரக்க குணம் கொண்ட கொண்ட போலீஸ் அதிகாரி. அவரும் அவரது அன்பு மனைவி லீனாவும் (ரம்யா நம்பீசன்) தங்கள் மகன் பிரபாகருக்கு (பிரணவ் மோகன்) இதயம் பலவீனமாக இருப்பதாகவும், எவ்வளவு விரைவில் மாற்று அறுவை சிகிச்சைக்குச் செல்கிறார்களோ அவ்வளவு நல்லது என்பதை அறிந்ததும் அதிர்ச்சியுறுகின்றனர்.

மகனை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள், ஆனால் ஓர் அமைச்சருக்கும் இதய மாற்று சிகிச்சை தேவைப்படுவதால், பிரபாகருக்கு மருத்துவமனை முக்கியத்துவம் அளிக்க மறுக்கிறது. இதனையடுத்து தமிழரசன் செய்வது என்ன, அவரால் தனது மகனைக் காப்பாற்ற முடியுமா என்பதே கதை!

இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆர்டி ராஜசேகர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இப்படத்தில் அறிமுகமாகிறார். ஏப்ரலில் இப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், தமிழரசன் திரைப்படம் நாளை (ஜூன்.16) ZEE5 தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படம் பற்றி இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “விஜய் ஆண்டனி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்கள் என் கருத்துக்கள் மேல் நம்பிக்கை கொண்டு தங்கள் அனைத்து திறமையையும் வெளிப்படுத்தினர். எங்களது இந்த உணர்வுப் பூர்வமான திரைப்படம் ZEE5-இல் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இயக்குநரின் கருத்துரு அளித்த நம்பிக்கை என்னை இப்படத்தில் இணைத்தது. அச்சத்தை ஏற்படுத்தும் சமூகத்தை கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் காட்சிகளை தமிழரசன் இதில் இணைத்துள்ளார். மேலும் இந்தப் படம் வலுவான செய்தியை வழங்குவதில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் வெளியானாலும், இந்தப் படத்தைப் பற்றி அறியாதோர் அல்லது காணாதோர் இன்னும் பலர் இருக்கிறார்கள். தமிழரசன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான கதை என்பதால் ஜூன் 16 ஆம் தேதி ZEE5 இல் பார்க்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.” எனக் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget